திருக்குறள் பற்றி பெரியார் பெருமளவுக்கு முரண்பட்டு தனது கருத்துக்களை கூறியிருக்கிறார். பகுத்தறிவுக்குப் பொருந்தாத காரணங்களைக் கூறி திருக்குறளை நியாயப்படுத்தி இருக்கிறார். அவற்றை இப்போது காண்போம்.
குறள் - ஹிந்துமத கண்டனப் புத்தகம் என்பதையும், அது சர்வமதத்திலுள்ள சத்துக்களை எல்லாம் சேர்த்து எழுதப்பட்டுள்ள மனித தர்ம நூல் என்பதையும் எல்லோரும் உணரவேண்டும். விரும்பிப் படித்து அதன்படி நடக்கவேண்டும். ஒவ்வொருவரும் தான் ஹிந்துவல்ல தராவிடனே - திருக்குறளானே என்று கூறிக் கொள்வதில் பெருமையடைய வேண்டும். விபூதியையும் நாமத்தையும் விட்டொழிக்கவேண்டும். புராணங்களைப் படிக்கக் கூடாது. என்ன மதம் என்றால் குறள் மதம், மனித தர்ம மதம் என்று சொல்லப் பழக வேண்டும். யார் எதைச் சொல்லிய போதிலும் எது எத்தன்மையுடையதாயிருப்பினும் ஒவ்வொருவரும் நன்கு சிந்தித்துப் பார்த்து ஆராய்ச்சி செய்து பார்த்து பிறகே எது உண்மை என்பதை முடிவு செய்ய வேண்டும். (விடுதலை 10-08-2008)
மேலும் பெரியார் கூறுவதைக் கேளுங்கள்.
இனி முஸ்லிம்கள் தங்களின் பாதுகாப்புக்காக எதாவது ஒரு கட்சியில் சேர்ந்து கொள்வதுதான் நல்லது. இன்றுள்ள அம்மாகாண முஸ்லிம் தலைவர்கள் சொற்ப சலுகைகளுக்காகவும் பயந்துக்காகவும் சுயநலத்துக்காகவும் காங்கிரஸ்காரர்களின் காலடியில் இருந்து கொண்டு வருகின்றனர். தமக்குக் கிடைக்கும் சலுகைக்காக முஸ்லிம் இனத்தையே காட்டிக்கொடுக்கத் துணிந்த அவர்களைக் கோழைகளாக்கிவிட்டனர். இதை முஸ்லிம் பாமர மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். காங்கிரசுடன் சேர்ந்து கொள்வதாயிருந்தால் தாராளமாய்ச் சேர்ந்து கொள்ளுங்கள். நாங்கள் வேண்டாம் என்று கூறவில்லை.
100க்கு 90 பேராயுள்ள எங்களையே ஏமாற்றிக் கொண்டிருக்கும் பார்ப்பனாகளா 100க்கு 7 பேரான உங்களுக்கு வளைந்து கொடுத்துவிடப் போகிறார்கள். எங்களைப் பொறத்தவரை இன்னும் நாங்கள் உங்களை எங்கள் உடன் பிறந்தவர்களாகத்தான் கருதி வருகிறோம்.
நீங்களும் குறள் மதக்காரர்கள் என்றே கருதுகிறோம். நாங்களும் உங்களைப் போல் ஹிந்து மதத்தை வெறுக்கிறோம் என்பதோடு குறளை ஒருபோதும் வெறுப்பவர்கள் அல்ல. ஒன்றுமே முடியாது போனால் உங்களைப் போன்று குல்லாயாவது போட்டுக்கொள்ளலாம் என்றுதான் நாங்கள் கருதியிருக்கிறோம். எனவே எங்கள் இனத்தவர் நீங்கள் என்பதற்காக உங்களை இந்த அளவுக்கு அளவளாவும் ஆதரிக்கும் எங்கள் கழகத்தில் வேண்டுமானாலும் சேருங்கள். அல்லது வடநாட்டவனால் பல கோடி செலவிட்டு பத்திரிக்கைகளைக் கொண்டு தீவிரப் பிரச்சாரம் செய்து ஹிந்துக்களைத் தூண்டிவிட்டு உங்களைக் கொள்ளையடிக்க நினைக்கும் பார்ப்பனர்களோடாவது சேர்ந்துகொள்ளுங்கள். (விடுதலை 10-08-2008)
முஸ்லிம்களுடைய குறைவான எண்ணிக்கையுடைய கிறிஸ்தவர்களுக்கும் சொல்கிறேன். கிறிஸ்தவர்களாகிவிட்டதாலேயே நீங்கள் உயர்ந்தவர்களென்று கருதிக் கொண்டு விடாதீர்கள். நீங்களும் குறள் மதக்காரர்கள். பைபிளுக்கு விரோதமாக குறளில் ஒன்றும் கிடையாது. பார்ப்பனர்களின் தயவுக்காக வேண்டி சுயமரியாதை இழந்துவிடாதீர்கள். உங்கள் நன்மையைப் பாதுகாத்துக் கொள்வதாயிருந்தால், ஜாதி சமய பேதமின்றி பாடுபடும் திராவிடர் கழகத்தில் சேருங்கள். திராவிடர் கழகம் திருவள்ளுவர் குறளைப் பின்பற்றி நடந்து வரும் கழகம். இந்நாட்டில் மனதர்மம் ஒழிந்து மனிதத் தன்மை ஏற்படப் பாடுபட்டு வரும் கழகம். அதற்குக் குறள்தான் வழிகாட்டி. எந்த முன்னேற்றத்திற்கும் விரோதமில்லாமல் பணியாற்றிவரும் கழகம் என்பதை உங்களால் உணர்ந்து, ஆன எல்லா உதவியையும் அதற்களித்து ஆதரியுங்கள். (விடுதலை 10-08-2008)
தமிழ் நூல்களையெல்லாம் பதினெட்டாம் பெருக்கில் ஆற்றில் போடச் செய்தும், நெருப்பில் பொசுக்கிப் பாழாக்கியும் விட்டனர் பார்பனர். எஞ்சியிருப்பது குறள் ஒன்றேயாகும் நமது திருவள்ளுவர் வகுத்த இக்குறள் வழிச் சென்றால் நம் நாட்டுக்கு மட்டுமின்றி வடநாட்டுக்கும் உலகத்துக்குங்கூட நாம் நன்னெறி காட்டியவர்கள் என்ற பெருமையை மீண்டும் அடைய முடியும். (விடுதலை 22-03-1960)
இதன் மூலம் பெரியார் பல விஷயங்களைக் கூறுகிறார்.
திருக்குறள் ஹிந்து மதத்தை கண்டிக்கும் நூல்.
எல்லா மதங்களிலும் கூறப்பட்ட நல்ல விஷயங்களின் தொகுப்பாக திருக்குறள் அமைந்துள்ளது.
இந்துக்கள் மட்டுமின்றி முஸ்லிம்களும் திருக்குறளை ஏற்க வேண்டும்.
என்றெல்லாம் பல விதங்களில் திருக்குறளைப் புகழ்ந்து பேசிய பெரியார் தனது மேற்கண்ட கூற்றுக்கு தானே எவ்வாறு முரண்படுகிறார் என்று பாருங்கள்.
அவரது குறளில் இந்திரன், பிரம்மா, விஷ்ணு முதலிய தெய்வங்களையும் மறுபிறப்பு, சுவர்கம், நரகம், மேலோகம், பிதுர், தேவர்கள் முதலிய ஆரிய மத சம்பிரதாயங்களையும், மூடநம்பிக்கைகளையும் கொண்ட விஷயங்களைப் பார்க்க காணலாம். (20-01-1929 குடியரசு இதழில் பெரியார்)
திருக்குறள் இந்துமதக் கண்டன நூல் என்று ஒரு பக்கம் கூறிக்கொண்டு இன்னொரு பக்கம் இந்து மதத்தில் கூறப்பட்ட அனைத்து தவறான கொள்கைகளும் திருக்குறளில் உண்டு என்கிறார்.
கீதை ராமாயணம் ஆகிய நூல்களை என்ன காரணம் கூறி பெரியார் ஒழிக்கச் சொன்னாரோ அந்தக் காரணங்கள் அனைத்தும் திருக்குறளிலம் உண்டு என்று மேலே ஒப்புதல் வாக்கு மூலம் தருகிறார்.
திருக்குறளில் சில நல்ல கருத்தக்கள் உள்ளன என்பதால் அதை ஆதரித்தார் என்று கூறினால் அதுவும் சரியான கருயான கருத்தாக இருக்க முடியாது. ஏனெனில் எல்லா மதங்களிலும் உள்ள நல்ல கருத்துக்களை திருக்குறள் உள்ளடக்கி உள்ளது என்று அவரே கூறியதை மேலே எடுத்துக் காட்டியுள்ளோம். எல்லா மதங்களிலும் நல்ல கருக்துக்கள் உள்ளன என்று பெரியார் இதன் மூலம் ஒப்புக் கொள்கிறார்.
வள்ளுவர் குறளையும், அந்தபடியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும்போது பலர் என்னிடம், 'எல்லாம் போய்விட்டால் நமக்கு என்னதான் நூல்?' என்று கேட்பார்கள். நான் 'இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது. அதை எடுத்து விடு என்று கூறினால் அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட்பது..?' என்று பதில் கூறுவேன். (விடுதலை 01-06-1950 ல் பெரியார்)
திருவள்ளுவன் அக்காலத்துக்கு ஏற்ற வகையில் ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் அளவில் பகுத்தறிவைப்பற்றி கவலைப்படாமல் நீதி கூறும் முறையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச்சென்றார். (தமிழும் தமிழரும் என்ற நூலில் ஈ.வே.ரா)
தற்காலம் நமது தமிழ்நாட்டில் வழங்கப்பெறும் நீதி நூல்களிலெல்லாம் திருவள்ளுவனால் இயற்றப்பட்டது என்று சொல்லப்படும் குறள் என்னும் நீதி நூலே மிகவும் மேலானது என்று சொல்லப்படுகின்றதானாலும் அதையும் பார்ப்பனர்களோ சைவர்களோ வைணவர்களோ மற்றும் எந்தப் பிரிவினர்களோ அடியோடு காரியத்தில் ஒப்புக்கொள்ளுவதென்றால் முடியாத காரியமாகவே இருக்கும். என்றாலும் திருவள்ளுவரைப் பற்றி ஏதாவது குற்றம் சொல்லிவிட்டால் பண்டிதர்களும் பெரும்பாலும் சைவர்களும் சண்டைக்கு மாத்திரம் வந்துவிடுவார்கள். பார்ப்பனர்களென்றாலோ திருவள்ளுவரின் பெயரைச் சொன்னாலே சண்டைக்கு வந்துவிடுவார்கள்.
இவ்வளவு இரந்தாலும் திருவள்ளுவர் யார்? என்ன ஜாதி? என்ன மதம்? அவரது கொள்கை என்ன என்பதில் இன்னமும் எல்லோருக்கும் சந்தேகமாகவே இருக்கிறது. சைவர்கள் திருவள்ளுவரைத் தம் சமயத் தலைவர் என்று பாத்தியம் கொண்டாடிக் கொள்கிறார்கள். வைணவர்களில் சிலர் அவரை வைணவர் என்று கொண்டாடுகின்றனர். சமணர்கள் அவரைத் தம் சமயத்தவர் என்கின்றார்கள். தாழ்த்தப்பட்ட வகுப்பார்களில் ஒரு சாராராகிய பறையர்கள் என்று சொல்லப்படுபவர்கள் திருவள்ளுவரைத் தம் இனத்தவர் என்று சுதந்திரம் பாராட்டுகிறார்கள். அவரைப் பற்றி கிடைக்கும் புராணமோ அல்லது அவரது சரித்திரக் கதையோ மிகவும் அசம்பாவிதமும் ஆபாசமானதுமாய்க் காணப்படுகின்றது.
இவ்வளவு புறச்சான்றுகளையும் விட்டுவிட்டு அகச்சான்று என்பதாகிய திருவள்ளுவர் குறளைப் பார்த்தாலோ, அதுவும் மயக்கத்திற்கிடமானதாக இருக்கின்றதே ஒழிய ஒரு தெளிவுக்கு ஆதாரமானதாய்க் காணப்படவில்லை. அவரது குறளில் இந்திரன், பிரம்மா, விஷ்ணு முதலிய தெய்வங்களையும் மறுபிறப்பு, சுவர்கம், நரகம், மேலோகம், பிதுர், தேவர்கள் முதலிய ஆரிய மத சம்பிரதாயங்களையும், மூடநம்பிக்கைகளையும் கொண்ட விஷயங்களைப் பார்க்கலாம்.
எனவே இவற்றைக் கொண்டு திரவள்ளுவர் யாராயிருக்கலாம் என்று பார்ப்போமானால், அவர் தற்காலப் பார்பனர்களை மாத்திரம் குற்றம் சொல்லிக் கொண்டு அவர்களால் கற்பிக்கப்பட்ட தெய்வங்கள், பராணங்கள் முதலியவற்றை எல்லாம் ஏற்றுக் கொண்டு, பார்ப்பனியம் என்னும் பார்ப்பனக் கொள்கைகளை ஒரு சிறிதும் தளர்த்த மனமில்லாதவர்களாய் இருந்து கொண்டு தங்களைப் பெரிய சீர்திரத்தக்காரர்கள் என்றும் தாங்கள் பெரிய கல்வி கேள்வி ஆராய்ச்சி முதலியவைகளில் தேர்ச்சி பெற்ற வல்லவர்கள் என்றும் சொல்லிக்கொண்டு தங்களை வெளியில் சமரச சன்மார்க்கச் சமயத்தவர் என்றும், உள்ளுக்குள் சைவ சமயம் தான் தன்னுடைய மதம் என்றும் மற்றும் இதுபோல் உள் ஒன்றும் புறமொன்றும் செய்கை ஒன்றுமாய் இருந்து கொண்டு தங்களை பெரிய சீர்திருத்தக்காரர்கள் என்று சொல்லிக்கொள்ளும் இப்போதைய சீர்திருத்தக்காரரைப் போல்தான் காணப்படுகிறார்.
இவை எப்படி இருந்தாலும் திரவள்ளுவரின் பெண்ணுரிமைத் தன்மையை பற்றிக் கவனித்தால் பெண்களுக்கு அவர் கூறிய குறளிலள்ள நீதிகள் ஒருபுறம் இருக்க, திருவள்ளுவன் மனைவியாகிய வாசுகியம்மையாரின் சரித்திரத்தைக் கேட்போர் மனம் பதறாமலிரக்க முடியாது. அதாவது வாசுகியம்மையாரைத் திருவள்ளுவர் தம் மனைவியாக ஏற்றுக் கொள்ளும் முன் ஆற்று மணலைக் கொடுத்து சாதம் சமைக்கச் சொன்னாராம். அதாவது வாசுகி கற்பள்ளவரா அல்லவா என்று பரிட்சிக்க. அவ்வம்மையார் அந்தபடியே மணலைச் சாதமாகச் சமைத்து கொடுத்து திருவள்ளுவருக்கு தமது கற்பைக் காட்டினாராம். அம்மையார் கிணற்றில் நீர் இறைக்கும்போது நாயனார் அம்மையாரைக் கூப்பிட, அம்மையார் கயிற்றை அப்படியே விட்டுவிட்டு வந்தபோது கயிறு கிணற்றில் விழாமல் அப்படியே தொங்கிக் கொண்டிருந்ததாம்.
திருவள்ளுவர் ஒருநாள் பகலில் நூல் நூற்கும்போது நூற்கதிர் கீழே விழ, உடனெ அம்மையாரைக் கூப்பிட்டு, 'விளக்கேற்றிக் கொண்டுவா, நூற்கதிரைத் தேடவேண்டும்' என்று சொல்ல அம்மையார் 'பகல் நேரத்தில் விளக்கு எதற்கு' என்று கேட்காமல் - கேட்டால் பங்கம் வந்துவிடும் எனக் கருதி உடனே விளக்குப் பற்றவைத்துக் கொண்டுவந்து கொடுத்தார்களாம்.
உரு நாள் நாயனார் பழைய சாத் சாப்பிடும்போது 'சாதம் சுடுகின்றது' என்று சொன்னவுடன் அம்மையார் 'பழைய சாதம் சுடுமா' என்று கூடக் கேட்காமல் - கேட்டால் பதிவிரத தன்மை கெட்டுப்போகுமே என்று கருதி உடனே விசிறி எடுத்துக்கொண்டு வந்து வீசி ஆற்றினாராம். திருவள்ளுவர் அம்மையாரை தினமும் ஒரு டம்ளரில் தண்ணீரும் ஒரு ஊசியும் தனியாகக் கொண்டு வந்து வைத்து விட்டு சாதம் பரிமாறும்படி கட்டளையிட்டிருந்தாராம். அவ்வம்மையாரும் 'இது எதற்காக' என்று கேட்காமல் - கேட்டால் பதிவிரத தன்மை கெட்டுப்போகுமே என்று கருதிக் கொண்டு தினமும் அந்த படியே செய்து வந்தாராம். ஆனால் அம்மையாரின் மரணத் தருவாயில் அம்மையார் உயிர் போகாமல் ஊசலாடிக் கொண்டிருக்க, அது ஏன் என்று திருவள்ளுவர் அம்மையாரைக் கேட்கும்போது அம்மையார் பயந்துகொண்டு 'தினமும் பாத்திரத்தில் தண்ணீரும் ஊசியும் வைக்கச் சொன்னீhகளெ அது எதற்காக என்று தெரிந்து கொள்ளவேண்டும் என்கிற ஆசை முடிவு பெறாமல் இருப்பதால் உயிர் போகாமல் ஊசலாடி மரணாவஸ்தைப்படுகிறேன்' என்று சொன்னாராம். பிறகு திருவள்ளுவர் தயவு செய்து பெரிய மனது வைத்து அதன் காரணத்தை, அதாவது சாம்பிடும்போது அன்னம் கீழே விழுந்தால் அந்த ஊசியில் குத்தியெடுத்து அந்த டம்ளர் தண்ணீரில் கழுவுவதற்கு என்று சொன்னாராம். அதன் பிறகுதான் அம்மையாரின் உயிர் நீங்கிற்றாம்.
இது திருவள்ளுவர் புராணத்தில் உள்ள அவரது மனைவியின் சரித்திரம். எனவே இது இடைச் செருகலாகவோ, கற்பனைக் கதையாகவோ இல்லாமல் உண்மைக் கதையாய் இருந்தால் திருவள்ளுவரின் பெண்ணுரிமை என்ன என்பதையும், கற்பனையாக இருந்தால் கற்பனையல்லாத புராணம் எது? அதற்கு என்ன பரிட்சை? என்பதையும் அறிஞர்கள் வெளிப்படுத்துவார்களாக. (ஜனவரி 20, 1929 'குடியரசு' பெரியார் சித்திரபுத்திரன் எனும் புனைப் பெயரில் எழுதிய கட்டுரை)
திருக்குறள் எவ்வளவு மூடத்தனம் நிறைந்தது என்று பின்வரும் கற்பனை உரையாடல் மூலம் பெரியார் தெளிவு படுத்தகிறார்.
நா : தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை என்கின்ற பொய்யாமொழிப் புலவரின் வேதவாக்கை கேட்டிருக்கின்றீர்களா?
ஆ. பெண் : ஆம் கேட்டிருக்கின்றேன்.
நா : கற்புடைய மங்கையர் மழை பெய்யென்றால் பெய்யும் என்கின்ற வேதவாக்கையும் கேட்டிருக்கின்றீர்களா?
ஆ. பெண் : ஆம் கேட்டிருக்கின்றேன்.
நா : சரி. ஊரில் மழை பெய்து மூன்று வருஷமாச்சுது. குடிக்கத் தண்ணீh கிடையாது. தயவு செய்து ஒரு இரண்டு உழவு (இரண்டு அங்குலம்) மழை பெய்யச் சொல்லுங்கள் பார்ப்போம்.
சித்திரபுத்திரன் எனும் புனைப் பெயரில் பெரியார் அவர்கள் எழுதியது.
சில விஷயங்களை ஒருவர் சரியாக விளங்கிக் கொள்ளாமல் இருந்து பின்னர் தமது கருத்தை மாற்றிக் கொண்டால் அது முரண்பாடு ஆகாது என்று சிலர் சப்பைக் கட்டு கட்டுவார்கள்.
இது எப்போது சரியான கருத்தாக இருக்கும்? திருக்குறளில் உள்ள தவறுகளை கவனிக்காமல் இருந்துவிட்டு பின்னர் தவறை அறிந்து மாற்றிக் கொண்டால் தான் அது சரியானதாகும். திருக்கறளில் உள்ள தவறுகளை விமர்சனம் செய்து விட்டு பின்னர் திரக்குறளை ஆதரித்தால் அப்போது இந்த கருத்து சரியாகாது.
திருக்குறளில் உள்ள தவறுகளை அறிந்த பின்னர் சந்தர்ப்பவாதத்துக்காகவோ கொள்கையில் சமரசம் செய்து கொள்வதற்காகவோ முரண்படுவதாகத்தான் எடுத்துக் கொள்ள முடியும். திருக்குறளின் குறைகளை விமர்சித்துவிட்டு பின்னர் அதை ஆதரிப்பதை மேலே நாம் எடுத்துக் காட்டியதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
திருக்குறளைப் பெரியார் புகழ்ந்ததை மட்டும் தான் வீரமணி வகையறாக்கள் வெளியிட்டு திருக்குறளை தூக்கிப் பிடிக்கிறார்களெ தவிர பகுத்தறிவுக்கு எதிரான திருக்குறளை விமர்சனம் செய்த பெரியாரின் கூற்றுக்களை இருட்டடிப்பு செய்து தாங்கள் பகுத்தறிவை வந்த விலைக்கு விற்று விட்டவர்கள் என்பதைச் சொல்லாமல் சொல்லவேண்டுமா?

இன்னும் வரும் இன்ஷா அல்லாஹ்.