முஸ்லிம்களையும் நபிகள் நாயகத்தையும் வம்பிக்கிழுத்த பொய் பகுத்தறிவுவாதிகளின் "உண்மை" எனும் ஏட்டுக்கு உணர்வு இதழ் விடுத்துக்கொண்டிருக்கும் அறைகூவின் தொகுப்பு!


போலி பகுத்தறிவுவாதிகளோடு விவாதிக்க உணர்வு இதழ் அறைகூவல். உண்மை ஏட்டுக்கு பதிலடி பாகம் - 12

திராவிடர் கழகத்தின் உண்மை எனும் ஏடு தேவையில்லாமல் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் வம்புக்கிழுத்து அர்த்தமற்ற கேள்விகளைக் கேட்டிருந்தது. அவர்களே வீண் வம்புக்கு நம்மை இழுத்ததன் அடிப்படையிலேயே போலி பகுத்தறிவுவாதிகளின் மூடநம்பிக்கைகளை நாம் தோலுரித்துக் காட்டி வருகிறோம்.

கன்னிப் பொங்கல் பற்றி பெரியார் கூறிய தத்துவத்தில் எந்த பகுத்தறிவும் இல்லை என்பதை விளக்கிவிட்டு, பொங்கல் பற்றி பெரியார் கூறிய பொருந்தாத காரணங்களை அடுத்த இதழில் காண்போம் என்று சென்ற இதழில் நாம் குறிப்பிட்டிருந்தோம்.

இந்த நிலையில் திராவிடர் கழக நண்பர்கள் அந்தத் தொடர் குறித்து தக்க விளக்கம் கூறுவதைத் தவிர்த்து விட்டு, பெரியார் இஸ்லாம் பற்றி உயர்வான கருத்தைக் கொண்டு இருந்ததைச் சுட்டிக் காட்டி முஸ்லிம் அபிமானியாகத் திகழ்ந்த பெரியாரை விமர்சிப்பது நியாயமானதுதானா? என்று உரிமையுடனும் நட்புடனும் நம்மிடம் கேட்டு வருகின்றார்கள். நமது விமர்சனத்தின் மூலம் பெரியாரை முஸ்லிம் விரோதியென்று யாரும் எண்ணிவிடக் கூடாது என்றும் அந்த நண்பர்கள் கூறுகின்றனர்.

பெரியார் அவர்கள் இஸ்லாம் குறித்து உயர்வான அபிப்பிராயம் வைத்திருந்ததை நாமும் நன்றாக அறிவோம். பெரியாரின் சொத்துக்களை அனுபவித்து வரும் வீரமணி வகையறாக்கள் இஸ்லாம் குறித்து பெரியார் கூறியதைத் திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்தாலும் இஸ்லாத்தைப் பற்றி பெரியார் உயர்ந்த கருத்தைக் கொண்டிருந்தார் என்பதை யாரும் மறைத்து விட முடியாது.

அந்த நண்பர்கள் கூறியதை ஏற்று இஸ்லாம் பற்றி பெரியார் கூறிய கருத்தக்களை எடுத்துக் காட்டிவிட்டு பெரியாரின் தவறான கருத்துக்களையும் கண்மூடிப் பின்பற்றுவோரின் அறியாமை பற்றிய விமர்சனத்தை தொடருவோம்.

இஸ்லாத்தைப் பற்றி நல்ல அபிப்பிராயம் வைத்திருந்தார் என்பதற்காக ஒருவரது கருத்துக்களில் உள்ள தவறுகளை விமர்சிக்காமல் இருப்பது நேர்மையற்றதாகிவிடும் என்பதற்காகவே பெரியாரின் கருத்துக்களை மட்டும் ஆய்வுக்கு உட்படுத்துகின்றோம்.

பெரியார் கூறுகிறார்.
முகமதிய மதம்

வெளிப்படையாய் நாம் பேசுவதானால், அம்பேத்கரும், அவரைப் பின்பற்றுவோரும் நாத்திகர்களாவதற்கும், மதமில்லாதவர்கள் ஆவதற்கும் இஷ்டமில்லாமல், அவர்கள் மீது இருக்கும் தீண்டாமை மாத்திரம் ஒழிய வேண்டும் என்று ஆசைப்பட்டு, அதற்காக முகமதியராகிவிடலாம் என்று அவர்கள் கருதினால், அதில் நமக்கு இருக்கும் ஆட்சேபனை என்ன என்று கேட்கின்றோம்.

முகமதிய மதத்தில் பல கெடுதிகள் இருக்கலாம், கோஷம் இருக்கலாம், கடவுள் இருக்கலாம், மூடநம்பிக்கை இருக்கலாம், மதச்சின்னம், மதச்சடங்கு இருக்கலாம், சமதர்மமில்லாமலும் இருக்கலாம். இதெல்லாம் யாருக்குக் கூடாது? சுயமரியாதைக்காரருக்குக் கூடாததாய் இருக்கலாம். மற்றும் பெண்ணுரிமை மாத்திரம் பேணுவோருக்கு முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம், மூடநம்பிக்கை அனுஷ்டிக்காதவர்களுக்கும் முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம், மத வேஷமும் பயனற்ற சடங்கும் வேண்டாதவருக்கு முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம், நாத்திகர்களுக்கும் பகுத்தறிவுவாதிகளுக்கும் முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம், சமதர்மவாதிகளுக்கும், பொதுவுடைமைக்காரர்களுக்கும் முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம்.

ஆனால் தீயர்கள், பறையர்கள், புலையர்கள், நாயாடிகள் என்று அழைக்கப்படுகின்ற, ஒதுக்கப்பட்டிருக்கின்ற, தாழ்த்தப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டு, நாயிலும், மலத்திலும், புழுத்த விஷக்கிருமிகளிலும் கேவலமாக மதிக்கப்பட்டு வருகிற மக்களிடம், தங்கள் மீது இருக்கும் தீண்டாமை மாத்திரம் ஒழிந்தால் போதும் என்று கருதிக்கொண்டிருக்கும் மக்களிடம் நமக்கு வேலை உண்டா இல்லையா என்று கேட்கின்றோம்.

ஏனெனில், அவன் கிருஸ்தவனாகி, கிருஸ்தவப் பறையன், கிருஸ்தவச் சக்கிலி, கிருஸ்தவப் பிள்ளை, கிருஸ்தவ நாயக்கன் என்று தீண்டாதவனாகவே இருப்பதை விட, பறத் துலுக்கன் என்றோ, சக்கிலிய முகமதியன் என்றோ, தீய முஸ்லிம் என்றோ அழைக்க இடமில்லாமலும், அழைக்கப்படாமலும் இருக்கும்படியான நிலையிலும் மற்றசமூகக்காரர்களோ மதக்காரர்களோ அவ்வளவு சுலபமாக இழிவுபடுத்தவோ, கொடுமையாய் நடத்தவோ முடியாத சயமரியாதை அனுபவமும் உள்ள நிலையிலும் இருக்கும் ஒரு மதத்திற்கு, 'எப்படியாவது தீண்டாமையை ஒழித்துக் கொள்ள வேண்டும்' என்கின்றவன் போனால், இதில் சுயமரியாதைக்காரனுக்கு என்ன நஷ்டம் என்று கேட்கின்றோம். அன்றியும் 'சரி எப்படியாவது தீண்டாமையை ஒழித்துக்கொள்' என்று சொல்வதிலும் என்ன தப்பு என்று கேட்கின்றோம்.

நமக்குக் கடிதம் எழுதின நண்பர், 'இந்து மதத்தில் தீண்டாமை இருக்கிறது. இஸ்லாம் மதத்தில் பார்க்காமை இருக்கிறது. பெண்களுக்கு உறைபோட்டு மூடிவைத்து இருக்கிறார்கள்' என்று எழுதியிருக்கிறார். அது (உறைபோட்டு வைத்திருப்பது) உண்மை என்றும் தவறானது என்றுமே வைத்துக் கொள்ளுவோம். இது பெண்ணுரிமை பேணுவோர்கள் கவனிக்க வேண்டிய காரியமே ஒழிய, தீண்டாமை விலக்கு மாத்திரம் வேண்டும் என்று கருதுகின்றவர்கள் யோசிக்கவேண்டிய கிரியம் அல்ல என்பது நமது அபிப்பிராயம். (17.11.1935 'குடியரசு' இதழில் பெரியார் எழுதிய தலையங்கம்)

மேலும் பெரியார் கூறுகின்றார்.

காட்டுமிராண்டிகளைத் திருத்திய முகமது நபி

அடுத்த நாட்டுக்காரன் முஸ்லிம். அவர்களும் காட்டுமிராண்டிகளாகக் கல்லைக் கட்டிக்கொண்டு அழுதவர்களாக இருந்தவர்கள்தான். முஹம்மது நபி தோன்றி அவற்றையெல்லாம் ஒழித்து ஒரே கடவளையும், அது பிறப்பு இறப்பு இல்லாததாகவும், ஒன்றும் வேண்டாததாகவும், அருளானதாகவும், அன்பானதாகவும் முஸ்லிம் ஆக்கிக்கொண்டான். அதன் காரணமாகவே முன்னேறுகிறான். (விடுதலை 30.10.1960)

மேலும் பெரியார் கூறுகிறார்.

தீண்டப்படாத மக்கள் கும்பல் கும்பலாய் மூஸ்லிம்களாக மாறியாக வேண்டும்

சகோதரர்களே! 69 ஆதிதிராவிடர்கள் முகமதியர்களாகிவிட்டதால், அவர்களுடைய பாவங்களெல்லாம் மன்னிக்கப்பட்டுவிட்டதென்றோ, அவர்களுக்கு 'மோட்சலோகம்' கூப்பிடும் தூரத்திற்கு வந்துவிட்டதென்றோ, ' கடவுளோடு கலந்துவிட்டார்கள்' என்றோ கருதி நான் மகிழ்ச்சி அடையவில்லை. இவைகளை நான் ஏற்றுக் கொள்ளவதும் இல்லை. மற்றவர்களை நம்பும்படி சொல்லுவதும் இல்லை. அன்றியும் ஒரு மனிதன் மதம் மாறுவதால் அவனுடைய செய்கைக்கும், எண்ணத்திற்கும் தகுந்த பலன் அடைவதில் வித்தியாசமுண்டு என்பதை நான் ஒப்புக்கொள்வதில்லை.

இந்துவாயிருந்து பசுவைக் கொன்றால் பாவம் என்றும், முகமதியனாயிருந்து பசுவைக் கொன்று தின்றால் பாவமில்லை என்றும், மதத்தின் காரணமாக கருதுவது மூட நம்பிக்கையே ஒழிய, இரண்டுவித அபிப்பிராயத்திலும் அர்த்தமே இல்லை. உலகத்திலுள்ள சகல மதங்களும் மூட நம்பிக்கையின் மீதே கட்டப்பட்டிருக்கின்றன. ஆகையால் பாவ புண்ணியத்தையும், மோட்ச நரகத்தையும் ஆதாரமாய் வைத்தும் நான் மகிழ்ச்சியடையவில்லை.

மற்றென்னவென்று கேட்பீhகளேயானால், இந்து மதம் என்பதிலிருந்து மதம் மாறினதாகச் சொல்லப்படும் 69 ஆதிதிராவிடர்களும், பிறவியின் காரணமாக அவர்களுக்குள்ள இழிவிலிருந்து விடுதலை அடைந்ததோடு பாமரத் தன்மையும் காட்டுமிராண்டித் தனமுமான மிருகப் பிராயத்திலிருந்தும், அறியாமையிலிரந்தும் சிறிது விடுதலை அடைந்தவர்களானார்கள் என்பதற்காகவே மகிழ்ச்சியடைகின்றேன்.

அதாவது மேற்கண்ட 69 பேர்களுக்கும் தீண்டாமை என்பது போய்விட்டது. இனி அவர்களைப் பறையன், சக்கிலி, சண்டாளன் என்று இழிவாய்க் கூறமுடியாது. அவர்களும் மற்றவர்களை 'சாமி, சாமி, புத்தி' என்று கூப்பிட்டுக் கொண்டு தூரத்தில் எட்டி நிற்க வேண்டியதில்லை. மற்ற மனிதர்களின் காலில் விழுந்து கும்பிட வேண்டியதில்லை. ஊரை விட்டு வெளியில் குடியிருக்க வேண்டியதில்லை. குளிக்கத் தண்ணீரில்லாமல், குடிக்கத் தண்ணீரில்லாமல் திண்டாட வேண்டியதில்லை.

வண்ணான், நாவிதன் இல்லாமல் அழுக்குத் துணியுடனும், கரடிபோல் மயிர் வளர்த்துக்கொண்டும், பார்ப்பவர்களுக்கு அசிங்கமாகத் தோன்றும்படி வாழ வேண்டியதில்லை. இனி எந்த பொதுத் தெருவிலும் நடக்கலாம். எந்த வேலைக்கும் போகலாம். அரசியலில் சம பங்கு பெறலாம். மத சம்பந்தமாகவும் இனி அவர்கள் தங்கள் கோயிலுக்குள் போக தாராள உரிமை உண்டு. வேதம் படிக்க உரிமை உண்டு.

எனவே, இவர்கள் பொருளாதாரக் கஷ்டத்திலும், அறிவு வளர்ச்சித் தடையிலும், சமூக இழிவிலும், சுயமரியாதைக் குறைவிலும் அரசியல் பங்குக் குறைவிலுமிருந்தும் ஒருவாறு விடுதலை அடைந்து விட்டார்கள் என்பது போன்றவைகளை நினைக்கும்போது மகிழ்ச்சியடையாமலிருக்க முடியவில்லை.

ஏனெனில், தீண்டாமை, நெருங்காமை, பார்க்காமை, பேசாமை முதலாகிய சகிக்க முடியாத கொடுமைகள் முதலாவதாக மதத்தின் பேரால், வேத சாஸ்திரங்களின் பேரால், கடவள்களின் பேரால் உள்ளவைகள் எல்லாம் அடியோடு நீங்கவேண்டும் என்கின்ற தீவிர ஆசையே இம்மாதிரி நினைக்கச் செய்கின்றது.

ஆகையால், தீண்டாமை முதலிய கொடுமை ஒழிய வேண்டும் என்கின்ற கருத்துள்ளவர்களுக்கும், ஒற்றுமையை எதிர்பார்க்கும் கருத்துள்ளவர்களுக்கும், மக்களுக்கு சுயமரியாதை உணர்ச்சியை ஊட்டவேண்டும் என்னும் கருத்துள்ளவர்களுக்கும், நமது நாட்டில் இப்போது உள்ள முக்கிய வேலை, முதலில் தீண்டப்படாதவர்கள் முகமதியராவதை ஆட்சேபியாதிருப்பதேயாகும் என்பது, எனது தாழ்மையானதும், கண்ணியமானதுமான அபிப்பிராயம்.

நிற்க. சிலர் முகமதிய மதம் முரட்டு சுபாவத்தை உண்டாக்குகின்றது என்று எனக்கு எழுதியிருக்கின்றார்கள். அது வாஸ்தவமானால், தீண்டப்படாதவர்களுக்கு அவர்களது தீண்டாமை ஒழிய முகமதிய மதத்தை சிபாரிசு செய்வதற்கு அதுவே ஒரு நல்ல காரணம் என்றே கருதுகிறேன். முகமதிய மதம் முரட்டு சுபாவத்தை உண்டாக்குவது உண்மையானால், அதில் சேர்ந்த இவர்கள் இனிமேலாவது இவ்வளவு தாழ்மையாக நடந்து கொள்ளமாட்டார்கள் அல்லவா? மற்றவர்களும் அவர்களது முரட்டு சபாவத்தைக் கண்டு பயந்து மரியாதையாய் நடந்து கொள்ள இடமேற்படும் அல்லவா?

ஆகையால், இந்து சமூகத்தில் உண்மையான சமத்துவமும் ஒற்றுமையும் எற்படும் வரை தீண்டப்படாதவர்கள் கும்பல் கும்பலாய் முகமதியர் ஆவதைத் தவிர வேறு மார்க்கமில்லையாதலால், நாம் அதை ஆட்சேபிக்க முடியாதவர்களாய் இருக்கின்றொம். தவிரவும், மதத்தினிடத்திலோ இந்து சமூகத்தினிடத்திலோ கவலையுள்ளவர்களுக்கு இதனால் எதாவது சங்கடம் இருப்பதாயிருந்தால், அவர்கள் தாராளமாய் வெளிக்கிளம்பி வந்து தீண்டப்படாத மக்களுக்கு இருக்கும் கொடுமையையும் இழிவையும் நீக்க முன்வரட்டும். எப்போதும் ஒத்துழைக்கத் தயாராயிருக்கின்றேன். (நன்றி : கீற்று இணையதளம்)

மேலும் பெரியார் கூறுகிறார்.

ஐந்து மணிக்குத் தீண்டத்தகாதவன் 5.30 மணிக்குத் தீண்டத்தகுந்தவன்.

நான் இந்து மதத்தைப் பற்றியோ, இஸ்லாம் மதத்தைப் பற்றயோ பேசுவது என்பதில் இரண்டு மதத்தினுடையவும் ஆதாரங்களை ஆராய்ச்சி செய்து பேசுவதாக யாரும் கருதிவிடாதீர்கள். அந்த வேலையை ஒரு பரீட்சை மாணவனுக்குக் கொடுத்து விடுங்கள். அதில் என்ன இருக்கின்றது என்பதில் எனக்குக் கவலை இல்லை. ஆனால் நான் பேசுவது என்பது, இரண்டு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பெரும்பான்மை மக்களிடையே இருந்துவரும் பிரத்தியட்சக் கொள்கைகள் சம்பந்தமான காரியங்களையும், அதனால் அவரவர்கள் பிரத்தியட்சத்தில் அடைந்துவரும் பலன்களையும் பற்றித்தான் பேசுகிறேன்.

அந்தந்த மதங்களில் மக்கள் எப்படி நடந்து கொள்கின்றார்கள்? அதனால் சமூகம் என்ன பயனடைந்திருக்கிறது? என்பன போன்றவைகள்தான் மதத்தின் மேன்மையை அளக்கும் கருவியாகும். அப்படிப் பார்ப்போமேயானால், அனேக விஷயங்களில் இந்து மதத்தை விட இஸ்லாம் மதமே மேன்மையுடையது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

இஸ்லாம் மக்களிடத்தில் தங்களுக்குள் சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை, அன்பு முதலிய குணங்கள் இருக்கின்றன. வீரம் இருக்கின்றது. வீரம் என்றால் லட்சியத்திற்கு உயிரை விடத் துணிவது என்பதுதான். இஸ்லாம் மதத்தில் உயர்வு தாழ்வு இல்லை. அவாகளுக்குள் தீண்டாதவன் இல்லை. அவர்களது தெருவில் நடக்கக் கூடாதவன், குளத்தில் இறங்கக் கூடாதவன், கோவிலுக்குள் புகக்கூடாத மனிதன் இல்லை. இதை யோக்கியமான இந்துக்கள் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.

இந்துக் கொள்கையில் வேறு எங்கு ஒற்றுமையாய் இருந்தாலும் சமூக வாழ்விலும், கடவுள் முன்னிலை என்பதிலும், மனிதன் மிருகத்தை விட கேவலமாய் நடத்தப்படுகின்றான். இதை நேரில் காண்கின்றோம். இதைத்தான் அன்பு மதம், சமத்துவ மதம் என்று இந்துக்கள் தைரியமாய்ச் சொல்லுகின்றார்கள்.

மததத்துவ நூலை, வேதம் என்பதை இஸ்லாம் மதத்தில் உள்ள செருப்பு தைக்கும் சக்கிலியும், மலம் அள்ளும் தோட்டியும் படித்தாக வேண்டும். பார்த்தாக வேண்டம். கேட்டாக வேண்டும். இந்து மத வேதம் என்பதை ஒரே ஒரு சிறு கூட்டம் தவிர, பார்ப்பனன் தவிர மற்ற யாவரும், அவன் பிரபுவானாலும், ஏழையானாலும், யோக்கியனானாலும், அயோக்கியனானாலும் சரி, ஒருவனுமே படிக்கவும், பார்க்கவும், கேட்கவும் கூடாது.

இஸ்லாம் கொள்கை மக்களை ஒன்று சேர்க்கிறது. இந்தியாவில் கொஞ்ச காலத்திற்கு முன் ஒரு கோடியை விடக் குறைந்த எண்ணிக்கையுள்ள முஸ்லிம்கள் இன்று 8 கோடி மக்களாய் சேர்ந்திருக்கிறார்கள். இன்று யாவரையும், எப்படிப்பட்ட இழிவானவர் என்று இந்து மார்க்கத்தாரால் கருதப்பட்டவர்களையும் தனக்குள் சேர்த்துக் கொள்ளக் கையை நீட்டுகின்றது. இந்துக்களின் கொள்கையோ எப்படிப்பட்ட மேலானவன் என்று மதிக்கப்பட்டவனையும் உள்ளே விட மறுத்து வாசற்படியில் காவல் காக்கின்றது. தன்னவனையும் வெளியில் பிடித்துத் தள்ளுகின்றது.

ஆதித் திராவிடர்களை நான் 'இஸ்லாம் மதத்தில் சேருங்கள்' என்று சொன்னதற்காக அனேகம் பேர் என் மீது கோபித்துக் கொண்டார்கள். அவர்களைப்பற்றி நான் கோபித்துக் கொள்வில்லை. அவர்களுக்குச் சொந்த அறிவும் இல்லை. சொல்வதைக் கிரகிக்கச் சக்தியும் இல்லை. சிலருக்குத் தங்கள் மேன்மை போய்விடுமே தங்களுக்கு அடிமைகள் இல்லாமல் போய்விடுமே என்கின்ற சுயநல எண்ணம்.

ஏனெனில், மோட்சம் அடைவதற்காக என்று நான் ஆதித் திராவிடர்களை இஸ்லாம் கொள்கைகளைத் தழுவுங்கள் என்று சொல்லவில்லை. அல்லது 'ஆத்மாத்தத்திற்கோ, கடவுளை அடைவதற்கோ' நான் அப்படிச் சொல்லவில்லை. அதித் திராவிடர்களின் தீண்டாமையைப் போக்குவதற்குச் சட்டம் செய்வது, சத்தியாகிரகம் செய்வது போலவே இஸ்லாம் கொள்கையை தழுவுவது என்பதும் ஒரு வழி என்றே சொன்னேன். இனியும் சொல்கின்றேன்.

சட்டம் செய்வது கஷ்டம். செய்தாலும் நடைமுறையில் வருவது கஷ்டம். சத்தியாகிரகம் செய்வது கஷ்டம். செய்தாலும் வெற்றி பெறுவது சந்தேகம். இவற்றால் துன்பமும் தோல்வியும் கிடைத்தாலும் கிடைக்கலாம். ஆனால் ஆதித் திராவிடர்களுக்கு இஸ்லாம் கொள்கையை ஏற்றுக் கொண்டேன் என்று சொல்வதில் என்ன கஷ்டம்? அதில் தோல்வியோ துன்பமோ ஏதாவது உண்டா? அல்லது, அன்னியருக்கு ஏதாவது கஷ்டம் உண்டா? அவன் ஆத்திகனாய் இருந்தால் என்ன? நாத்திகனாய் இருந்தால் என்ன? உண்மை இஸ்லாம் ஆனால் என்ன? பொய் இஸ்லாம் ஆனால் என்ன? உலகில் மதங்கள் ஒழிக்கப்படும் போது இஸ்லாம் மதமும் ஒழியும்.

ஏன் கிருஸ்து மதத்தை தழுவக் கூடாது? ஆரிய சமாஜத்தைத் தழுவக்கூடாது? கிருஸ்து மதக் கொள்கைகள் புத்தகத்தில் எப்படி இருக்கின்றன என்பதைப் பற்றி நான் சொல்ல வரவில்லை. நடை முறையில் பறை கிறிஸ்தவன், பார்ப்பாரக் கிருஸ்தவன், வேளாளக் கிறிஸ்தவன், நாயுடு கிறிஸ்தவன், கைக்கோளக் கிறிஸ்தவன், நாடார் கிறிஸ்தவன் என்பதாக தமிழ்நாடு முழுவதும் உள்ளனர்.

இஸ்லாம் மார்க்கத்தில் இவ்வித வேறுபாடுகள் இருக்கின்றனவா? கிறிஸ்தவ சகோதரர்கள் கோபிக்கக் கூடாது. வேண்டுமானால் வெட்கப்படுங்கள் என்று வணக்கமாய்த் தெரிவித்துக்கொள்கின்றேன். ஆரிய சமாஜம் என்பதும் ஒரு வேஷந்தான். (சாத்தன்குளத்தில் 28.07.1931 அன்று பெரியார் ஆற்றிய உரை. குடியரசு 2.8.1931)

முஸ்லிம் மார்க்கத்தைத் தஞ்சமடைக!

இந்து மத ஊழல்களைத் திருத்தப்பாடு செய்த புதுமதக் கொள்கைகளே இன்று கிருஸ்து மார்க்கம், முஸ்லிம் மார்க்கம், முதலிய பல புதிய மார்க்கங்களாகத் தோன்றலாயின. இந்துமதக் கொடுமை தாங்கமாட்டாமலேதான் பல கோடி பேர்கள் முஸ்லிம்களாகவும், கிருஸ்தவர்களாகவும் ஆனார்கள். இன்றும் இந்துக்கள் பிறமதம் புகுகிறார்கள். என்றாலும் முஸ்லிம் மார்க்கம் தவிர வேறு எந்த மார்க்கத்துக்கு மனிதன் போனாலும் அவன் பின்னாலேயே ஜாதிச் சனியன் தொடர்ந்து கொண்டே போகிறது. உதாரணமாக ஒருவர் கிறிஸ்தவனாகப் பிறக்கும் பார்ப்பனக் கிறிஸ்தவன், பள்ளக் கிறிஸ்தவன், பறை கிறிஸ்தவன், நாயுடு கிறிஸ்தவன், ஆசாரி கிறிஸ்தவன், நாடார் கிறிஸ்தவன் என்கின்ற பாகுபாடும், சடங்கு ஆச்சார அனுஷ்டானமும் எந்தக் கிறிஸ்தவனையும் விட்டுத் தொலைவதில்லை. பிரார்த்தனை ஸ்தலங்களிலும் இந்துக் கோயில்கள் போல இருந்து வருகின்றன.

அனால் இந்த இழிவு ஆபாசம் முஸ்லிம் மார்க்கத்திலே காணமுடிவதில்லை. ஒரு தீண்டாதான், முஸ்லிம் மதத்தை தழுவிவிட்டால் உடனே தீண்டாமை பறந்து போகிறது. அவன் அந்த சமூகத்தில் மனித சுதந்திரத்தை, சமத்துவத்தைப் பெறுகிறான். அங்கு பற முஸ்லிம் யாரேனும் என்று சொல்லி, தங்கள் பற்களை காப்பாற்றிக் கொள்ள முடியாது. ஏன்? அவர்கள் தங்கள் மதத்தினிடையே சமத்துவம் நிலவ வேண்டுமென்ற உணர்ச்சியை அவ்வளவு அதிகமாகக் கொணடுள்ளனர். அதனாலேயே தீண்டாமையை விலக்கிக் கொள்ள வேண்டுமென்கிறவர்களை முஸ்லிம் மார்க்கத்தை தஞ்சமடையும்படி இந்த பத்து வருஷமாய்ச் சொல்லி வருகிறேன். (23.1.1938 அன்று அயக்கவுண்டன்பாளையத்தில் நடைபெற்ற மாநாட்டில் தந்தை பெரியார் ஆற்றிய உரையில் கடவுள் பற்றிய பகுதி - குடியரசு 30.1.1938)

பகுத்தறிவாளர்களுக்குக் கூட மறைக்கப்பட்ட பெரியாரின் சில அறிவரைகளை நாமே எடுத்துக் காட்டிவிட்டோம். பெரியார் மீது எமக்கு எந்த துவேசமும் இல்லை. அதே நேரத்தில் எவரது கருத்தையும் எடைபோட்டுப் பார்ப்பதே பகுத்தறிவு' என்ற அடிப்படையிலேயே நமது விமர்சனம் அமைந்துள்ளது என்பதை பெரியார் அன்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இனி ஏற்கனவே அறிவித்தபடி பொங்கல் பற்றி பெரியாரின் கருத்தை அலசுவோம்.
இன்ஷா அல்லாஹ்


போலி பகுத்தறிவுவாதிகளோடு விவாதிக்க உணர்வு இதழ் அறைகூவல். உண்மை ஏட்டுக்கு பதிலடி பாகம் - 11

பெண்களை வீட்டு வேலை செய்வது, கோலம் போடுவது, சாணி தட்டுவது, பாத்திரம் கழுவுவது, கும்மியடிப்பது, கோலாட்டமடிப்பது என்பது போன்ற அடிமை வேலைக்குத் தயார் செய்யாதீர்கள்'' என்று 8.3.1936 குடியரசு ஏட்டில் எழுதிய பெரியார் அவர்கள் தமது இரு மனைவிகளுக்கும் கூட அந்த உரிமையை வழங்கவில்லை என்பதைத் தக்க சான்றுகளுடன் சென்ற இதழில் தெளிவுபடுத்தியிருந்தோம்.

பெரியார் தனது மேற்கண்ட அறிவுரையைத் தானே மற்றொரு விஷயத்தில் மீறியிருக்கிறார் என்பதை இப்போது காண்போம்.

தமிழகத்தைச் சேர்ந்த இந்துக்கள் பொங்கல் எனும் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். வீட்டுப் பொங்கல், மாட்டுப் பொங்கல், கன்னிப் பொங்கல், காணும் பொங்கல் என்று இதில் பலவகை உண்டு.

இந்தப் பண்டிகையும் பகுத்தறிவு அடிப்படையில் எதிர்க்கப்பட வேண்டியதே என்றாலும் இப்பண்டிகையில் பிராமணர்களின் ஆதிக்கம் இல்லாத ஒரே காரணத்துக்காக பொங்கல் பண்டிகையை பெரியார் ஆதரித்தார். அதைக் கொண்டாடுமாறு வயுறுத்தினார்.

கன்னிப் பொங்கலை ஆதரித்து அவர் உதிர்த்த தத்துவத்தைப் பாருங்கள்!

இந்தப் பொங்கல் பண்டிகை என்ப தற்குச் சரியான பொருள் அறுவடைப் பண்டிகை என்பதாகும். இவற்றில் கன்னிப் பொங்கல் என்பது சிறு பெண் அதாவது, பூப்படையாத, கல்யாணமில்லாத, கலவி அறியாத பெண் என்பவர்கள் சமையல் செய்து பழகுவதற்காக அவர்களையே கொண்டு சமையல் செய்யப்படுவதாகும். இதில் பெரிய பெண்கள் அந்தச் சிறு பெண்களுக்கு சமையல் முறையைச் சொல்லிக் கொடுப்பார்கள். (விடுதலை : 14.01.1972ல் பெரியார்)

பெண்களுக்குச் சமையல் கற்றுக் கொடுப்பது, பாத்திரம் கழுவக் கற்றுக் கொடுப்பது பெண்ணுரிமைக்கு எதிரானது என்று ஒருபுறம் கூறிக்கொண்டு இன்னொருபுறம் (அவரது வாதப்படி) பெண்ணுரிமைக்கு எதிராகப் பெண்ணைத் தயார்படுத்தும் கன்னிப் பொங்கலைக் கொண்டாடுவதை அவர் நியாயப்படுத்தியதில் எது பகுத்தறிவுப்பூர்வமானது?

பெரியார் கூறிய காரணத்திற்காகத்தான் கன்னிப் பொங்கல் கொண்டாடப்படுகிறது என்றால் மற்றவர்களைவிட பெரியார் பொங்கல் பண்டிகையை எதிர்க்க வேண்டுமல்லவா?

குறிப்பிட்ட நாளில் சமையல் செய்ய கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி அதற்காகப் பண்டிகையும் கொண்டாடினால் பெண்களை அடிமையாக்குவதை ஒட்டுமொத்த சமூகமே அங்கீகரிக்கிறது என்பதுதானே அதன் பொருள்?

எதிலுமே பகுத்தறிவுக்கு ஏற்ற பார்வை, விசாலமான சிந்தனை பெரியாரிடம் இருந்ததில்லை என்பதற்கும், தனக்குத்தானே முரண்படுவதுதான் பெரியாரின் தனித்தன்மை என்பதற்கும் இதுவும் சான்றாக அமைந்துள்ளது.

கன்னிப் பொங்கலை நியாயப்படுத்திட இவர் எடுத்து வைத்த காரணம் இன்னொரு வகையிலும் பகுத்தறிவுக்கு எதிரானதாக உள்ளது.

பெண்களுக்குச் சமையல் கற்றுக் கொடுப்பது குறித்த பெரியாரின் முரண்பாட்டை ஒதுக்கி வைத்து விட்டுப் பார்ப்போம்.

பெண்களுக்குச் சமையல் முதலான வேலைகளைக் கற்றுக் கொடுப்பது என்றால் பெற்றோருக்கு எப்போது வசதிப்படுமோ அப்போது கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதுதான் பகுத்தறிவுப்பூர்வமானது. குறிப்பிட்ட நாளில்தான் அனைவருக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று திணிப்பது மதவாதிகளுக்குச் சரியாக இருக்கலாம். பகுத்தறிவுப் பகலவனுக்குச் சரியாக இருக்குமா?

அந்த நாளில்தான் இதைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதில் உள்ள பகுத்தறிவு தத்துவம் என்ன? வேறு நாட்களில் கற்றுக் கொடுத்தால் அதில் உள்ள மூடநம்பிக்கை என்ன? இதைப் போலி பகுத்தறிவாளர்களால் விளக்க முடியுமா?

மேலும் பெரியார் கூறுவதில் உண்மை இல்லை என்பதையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டும்.

கன்னிப் பொங்கலை எதிர்பார்க்காமலும், பெண்கள் கன்னிப் பருவத்தை அடைவதை எதிர்பார்க்காமலும் சிறுமிகளாக இருக்கும்போதே சமையல் தொடர்பான வேலைகளைப் பெற்றோர் கற்றுக் கொடுப்பார்கள் என்பதுதான் உண்மை. "கன்னிப் பொங்கல் வரும்வரை சமையலறைப் பக்கம் வராதே'' என்று பெண் பிள்ளைகளுக்குப் பெற்றோர் தடை ஏதும் விதிப்பதில்லை.

அதற்கு முன் பெண்கள் சமையலறைப் பக்கமே போவதில்லை என்பது போலவும், கன்னிப் பொங்கல் அன்று தான் சமையலைக் கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள் என்பது போலவும் பெரியார் கூறுவது தனது மனோ இச்சையை நியாயப்படுத்த பெரியார் செய்த பொய்யான கற்பனையாகும்.

மேலும் கன்னிப் பொங்கல் அன்று சோறு சமைப்பதற்கு மட்டும்தான் கன்னிப் பெண்களுக்குக் கற்றுக் கொடுப்பார்கள்.

சாம்பார், பிரியாணி, சூப் போன்றவைகளைக் கற்றுக் கொடுப்பதற்கு மட்டும் ஏன் பண்டிகை இல்லை?

13 வயதில் கன்னியாகி 22 வயதில் திருமணம் நடந்தால் முதல் வருடம் மட்டுமே அப்பெண் சமையலைக் கற்றுக் கொள்வாள் என்பதில் உண்மையிருக்க முடியும். அதன் பின்னர் எட்டு ஆண்டுகள் அவள் ஏன் கன்னிப் பொங்கல் கொண்டாட வேண்டும்? அவள்தான் முதல் வருடமே கற்றுக் கொண்டு விட்டாளே?

முதல் வருடம் கற்றுக்கொண்ட சோறு பொங்குவதையே எட்டு ஆண்டுகள் திரும்பத் திரும்பக் கற்றுக்கொள்வது ஏன்?

"பொங்கல் பண்டிகையும் பகுத்தறிவுக் கொள்கைப்படி தவறானதுதான்'' என்று அறிவித்து பொங்கல் பண்டிகையை போலி பகுத்தறிவுவாதிகள் ஏன் எதிர்க்கவில்லை? மதவாதிகள் தமது முன்னோர் கூறியதைக் கண்மூடிப் பின்பற்றுவதற்கும் தமது கடவுளாகிய பெரியார் சொல்லிவிட்டதால் அதைக் கண்மூடிப் பின்பற்றுவதற்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா?

பொங்கல் பண்டிகை குறித்து பெரியார் உதிர்த்த இன்னும் பல தத்துவங்களை எவ்வாறு பகுத்தறிவுக்கு எதிராக உள்ளது என்பதை அடுத்த இதழில் காண்போம். இன்ஷா அல்லாஹ்.


போலி பகுத்தறிவுவாதிகளோடு விவாதிக்க உணர்வு இதழ் அறைகூவல். உண்மை ஏட்டுக்கு பதிலடி பாகம் - 10

போலி பகுத்தறிவுவாதிகளான திராவிர் கழகத்தினர் இஸ்லாத்தை வம்புக்கிழுத்ததன் அடிப்படையில் அவர்கள் மதவாதிகளைவிட அதிக மூட நம்பக்கையுள்ளவர்களாக இருப்பதை தக்க சான்றுகளுடன் அம்பலப்படுத்தி வருகின்றோம்.

நமது வாதங்களுக்கும், அறிவுப்பூர்வமான கேள்விகளுக்கும் பதில் சொல்ல வக்கற்ற போலி பகுத்தறிவாளர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல திருமணங்கள் செய்தது ஏன் என்று இணைய தளங்கள் மூலமாக விஷமப்பிரச்சாரம் செய்வதை பதிலாக்கியுள்ளனர்.

மணியம்மை என்ற இளம் வயதுப் பெண்ணை பெரியார் என்ற முதியவர் மணந்தது சரியா என்பது நமது கேள்வியல்ல.

ஆணோ பெண்ணோ தமது விருப்பத்திற்கேற்ப அதிக வயதுடையவரை மணந்தால் அதை இஸ்லாம் மறுக்காது.

நமது கேள்வியும் அதைப் பற்றியது அல்ல.

வயதான கிழவர்கள் இளம்பெண்ணை மணக்கக் கூடாது என்பதைக் கொள்கையாகக் கொண்ட ஒருவர், தானே அதை மீறியது ஏன் என்பதுதான் மணியம்மை திருமணம் குறித்த நமது கேள்வி.

இதற்கு பதில் சொல்ல துப்பு கெட்டவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் திருமணம் பற்றி இணைய தளங்களில் கேள்வி எழுப்புவது அவர்களின் பகிரங்கத் தோல்வியை எடுத்துக் காட்டுகிறது.

(''நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல திருமணங்கள் செய்தது ஏன்'' என்ற எமது நூலில் இதுபற்றி மிக விரிவாக ஏற்கனவே நாம் பதிலளித்துள்ளோம்)

போலி பகுத்தறிவுவாதிகள் நமது கேள்விகளுக்கு நேரடியாக பதில் தரட்டும். அல்லது நபிகள் நாயகம் அவர்களின் பல திருமணங்கள் உட்பட அனைத்து விஷயங்களைப் பற்றியும் பகிரங்க விவாதத்துக்கு முன்வரட்டும் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறோம்.

இனி எடுத்துக்கொண்ட தலைப்புக்கு வருவோம்.

பெரியாரிடம் காணப்பட்டது போன்ற முரண்பாடுகள் கொண்ட ஒரு தலைவரை தமிழகத்தில் காண்பது அரிது என்பதற்கான மற்றொரு சான்றைப் பாருங்கள்.

''பெண்கள் வீட்டு வேலை செய்வது, கோலம் போடுவது, சாணி தட்டுவது, பாத்திரம் கழுவுவது, கும்மியடிப்பது, கோலாட்டமடிப்பது என்பது போன்ற அடிமை வேலைக்குத் தயார் செய்யாதீர்கள்''. (குடியரசு : 08-03-1936)

பெண்களை எப்படி நடத்த வேண்டும் என்று இதுபோன்ற பல அறிவுரைகளைப் பெரியார் கூறினார். ஆனால் அவர் கூறிய அனைத்தையும் அவரே முதலில் மீறக் கூடியவராக இருந்தார்.

நாகம்மாள் என்ற முதல் மனைவி மறைந்தபோது நாகம்மாளை பெரியார் எப்படி நடத்தினார் என்பதை அவரே வெளிப்படையாக அறிவித்தார்.

''நாகம்மாளை நான் தான் வாழ்க்கைத் துணையாகக் கொண்டு இருந்தேனேயில்லாமல் நாகம்மாளுக்கு நான் வாழ்க்கைத் துணையாக இருந்தேனா என்பது எனக்கே ஞாபகத்துக்கு வரவில்லை...''

''...பெண்கள் சுதந்திர விஷயமாகவும், பெண்கள் பெருமை விஷயமாகவும் பிறத்தியாருக்கு நான் எவ்வளவு பேசுகிறேனோ, போதிக்கிறேனே அதில் நூறில் ஒரு பங்கு வீதமாவது என்னருமை நாகம்மாள் விஷயத்தில் நான் நடந்து கொண்டிருந்தேன் என்று சொல்லிக்கொள்ள எனக்கு முழு யோக்கியதை இல்லை.''

''...ஆனால் நாகம்மாளோ, பெண் அடிமை விஷமாகவும் ஆண் உயர்வு விஷயமாகவும் சாஸ்திர புராணங்களில் எவ்வளவு கொடுமையாகவும் மூர்க்கமாகவும் குறிப்பிட்டிருந்ததோ அவற்றுள் ஒன்றுக்குப் பத்தாக நடந்து கொண்டிருந்தார் என்பதையும், அதை நான் ஏற்றுக்கொண்டிருந்தேன் என்பதையும் மிகுந்த வெட்கத்துடன் வெளியிடுகின்றேன்.'' (-குடியரசு : 14-05-1933)

ஊருக்கெல்லாம் எதை மிக அதிகமாக வலியுறுத்திப் பெரியார் பேசி வந்தாரோ அதை மிக அதிக அளவில் தெரிந்து கொண்டே பெரியார் மீறியுள்ளார். எந்த உரிமைகள் பெண்ணுக்குக் கொடுக்க வேண்டும் என்றாரோ அதை அவரது மனைவிக்குக் கூட அவரால் கொடுக்க முடியவில்லை.

தான் போதிக்கும் தத்துவம் தன்னாலேயே நடைமுறைப்படுத்த முடியாத ஒன்று என்று அறிவித்த பின்னர் இதில் என்ன நேர்மை உள்ளது?

"தோழர்களே! ஜாதி ஒழிப்புக்காரர்கள் வீட்டில் உருவச் சின்னங்களோ, மதக் குறியோ சாஸ்திர, சம்பிரதாய நடப்போ இருக்கக் கூடாது. கண்டிப்பாய் இருக்கக் கூடாது." (-விடுதலை : 17-08-1962)

இவரது இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தன் அளவில் மட்டுமின்றி தன் குடும்பத்திலும் இவர் கூறும் கொள்கையை கண்டிப்பாப கடைபிடிக்க வேண்டும் என்று கூறும் பெரியார், தன் மனைவியை சாஸ்திர, சம்பிரதாயங்களில் கூறியபடியே நடத்தியிருக்கிறார் என்பது எவ்வளவு பெரிய மோசடி!

இதை நாம் விமர்சிக்கும்போது இந்த விமர்சனம் நியாயம்தானே என்று எடுத்துக் கொள்ளாமல் பெரியார் என்ற கடவுள் மேல் பக்தி கொண்டு கோபப்படுவது எந்தவகைப் பகுத்தறிவு?

எது பெண்ணுரிமை என்று பெரியார் வாதிட்டாரோ அதை முதல் மனைவிக்கு மட்டுமின்றி இரண்டாம் மனைவிக்கும் அவர் வழங்கவில்லை.

வயதான காலத்தில் மூத்திரக் குழாயில் அடைப்பு எற்பட்டபோது மணியம்மையை பணந்து தனக்கு பணிவிடை செய்வத்காகவே பயன்படுத்திக் கொண்டார்.

"எனது காயம் சற்ற கடினமானதுதான், எளிதில் குணமாகாது. மூத்திர வழியே கற்கள் இருக்கின்றன. அவை கரைய மாதக்கணக்கில் காலமாகும். ஒரு சமயம் அபரேஷன் தேவையிருந்தாலும் இருக்கலாம். ஆனாலும் நான் நான் பயப்படவில்லை. எதற்கும் நான் தயாராக இருக்கிறேன். மணியம்மையார் கவனிப்பும், உதவியும் அளவிடற்கரியது." (-விடுதலை : 17-09-1967)

பெரியாரின் மூத்திரத்தை சுத்தம் செய்வது தான் அவரது மனைவியின் கடமையா? இதைத் தானே பெண்ணுரிமைக்கு எதிரானது என்று பெரியார் கூப்பாடு போட்டார். தனக்குச் சேவை செய்வதற்காக ஒரு இளம் பெண்ணை மணந்து பயன்படுத்திக் கொண்டது அவர் போதித்த பெண்ணுரிமைக்கு எதிரானது என்று அவரது பக்தர்களுக்கு ஏன் தோன்றவில்லை?

"மணியம்மை தானாக விரும்பித்தான் இதை செய்தார்" என்று இன்று போலி பகுத்தறிவுவாதிகள் கூறும் சமாதானம் ஏற்கத்தக்கது அல்ல. பெரியார் பாஷையில் சொல்வதானால் அயோக்கியத்தனம்.

எல்லா மனைவிமார்களும் விரும்பியே கணவனுக்குப் பணிவிடை செய்வதைத் தான் பெரியார் கண்டித்தார். அவ்வாறு விரும்புவதே தவறு என்பது தான் அவரது வாதம்.

மணியம்மை விரும்பினாலும் அதை பெரியார் எற்றிருக்கக் கூடாது. என்பதை இவர்கள் சிந்திக்க மறுப்பது ஏன்? கண்ணை மூடிக்கொண்டு நவீன தெய்வமாக பெரியாரைக் கருதிக் கொண்டதுதான்.

எனவே, தான் பேசிய எந்த ஒன்றையும் பெரியார் முதலில் மீறியவராக இருந்தார் என்பது இதன் மூலம் நிரூபணமாகின்றது.

''பெண்கள் வீட்டு வேலை செய்வது, கோலம் போடுவது, சாணி தட்டுவது, பாத்திரம் கழுவுவது, கும்மியடிப்பது, கோலாட்டமடிப்பது என்பது போன்ற அடிமை வேலைக்குத் தயார் செய்யாதீர்கள்''. (குடியரசு : 08-03-1936)

மேற்கண்ட போதனையை மற்றொரு விஷயத்திலும் தானே மீறினார். அதை அடுத்த இதழில் காண்போம். இன்ஷா அல்லாஹ்.


போலி பகுத்தறிவுவாதிகளோடு விவாதிக்க உணர்வு இதழ் அறைகூவல். உண்மை ஏட்டுக்கு பதிலடி பாகம் - 9

ள்எந்த ஒரு கொள்கையைப் பிரதானமாக ஒருவர் பிரச்சாரம் செய்கிறாரோ அந்த கொள்கையை அவர் உறுதியுடன் கடைபிடிக்க வேண்டும். அக்கொள்கை அனைவராலும் கடைபிடிக்க முடியாததாக இருந்தாலும் அக்கொள்கையை ஆதரிப்பவர்களால் மட்டுமாவது அது பின்பற்றப்படவேண்டும். உலகில் எவராலும் கடைபிடிக்கப் பட முடியாத எந்த கொள்கையும் பகுத்தறிவு சார்ந்ததாக இருக்க முடியாது.

பகுத்தறிவுத் தந்தை என்று போலி பகுத்தறிவுவாதிகளால் அழைக்கப்படும் பெரியார் முழங்கி, போலி பகுத்தறிவாளர்களால் பெருமையுடன் வெளியிட்டுவரும் இந்த கொள்கையைப் பாருங்கள்.

'எனவே பெரியார்களே! பெண்களை பெண் என்று அழைக்காமல் ஆண் என்றே அழைக்க வேண்டும். பெயர்களும் ஆண்கள் பெயர்களையே இட வேண்டும். உடைகளும் ஆண்களைப்போல் கட்டுவித்தல் வேண்டும்' (வாழ்க்கைத் துணை நூலிலிருந்து... 1958 ஆம் ஆண்டு பதிப்பு)

பெண்களை பெண்கள் என்று அழைப்பதுதான் பகுத்தறிவு, அறிவியல் முடிவு. பெண்ணையும் ஆணையும் பகுத்தறிவின் துணை கொண்டு ஆய்வு செய்தாலும், உடற்கூறு அடிப்படையில் ஆய்வு செய்தாலும் மற்றும் அறிவியலின் எந்த கோணத்தில் ஆய்வு செய்தாலும் இரண்டும் தனித்தனி என்பது நிரூபணமாகும்.

நிதர்சனமான உண்மைக்கு எதிரான இந்த கருத்து பகுத்தறிவுக்கு எந்த வகைில் ஏற்றது என்பதை போலிப் பகுத்தறிவாளர்கள் விளக்கத் தயாரா?

இது அறிவியலுக்கும், பகுத்தறிவுக்கும் எதிரானது என்றால் இதைக் கூறியவர் பகுத்தறிவுக்கே தந்தை என்று வாதிடுவதில் உள்ள பகுத்தறிவு என்ன?

ஒரு மனிதனின் மேல் குருட்டு பக்தி வைத்து அவர் அறிவியலுக்கு எதிரான கருத்தை பேசினாலும் அதையும் பகுத்தறிவு என்று வாதிடும் இவர்களுக்கும், முன்னோர்கள் எழுதிவைத்த கட்டுக்கதைகளை நம்புபவர்களுக்கும் இடையில் அடிப்படையில் எந்த வேறுபாடும் இல்லை.

மேலும் தந்தை பெரியார் கூறியபடி அவரது பிள்ளைகள (?) யாரும் பெண்களை ஆண் என்று சொல்லி வளர்ப்பதில்லை. ஆண்களின் பெயரை இடுவதும் இல்லை. ஏற்கனவே இடப்பட்ட பெண் பெயர்களை ஆண் பெயர்களாக மாற்றுவதும் இல்லை.

பெரியார் கூட தனது முதல் மனைவியின் 'நாகம்மாள்' என்ற பெயரை மாற்றாவிட்டாலும் தனது கொள்கையை எற்றுக்கொண்ட மணியம்மையின் பெரை மணியப்பன் என்றொ மணிவண்ன் என்றோ ஆண் பெயராக மாற்றவில்லை.

வீரமணி வகையறாக்கள் தமது குடும்பப் பெண்களுக்கு எழில் அரசி, தமிழரசி என்பது போல்தான் பெயர்களைச் சூட்டுகிறார்கள். பெண்ணுக்கு எழிலரசன் என்றோ தமிழரசன் என்றோ பெயர் சூட்டுவதில்லை.

மதவாதிகளைவிட போலி பகுத்தறிவுவாதிகள் அதிக மூட நம்பிக்கையுள்ளவர்களாக இருப்பதை இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

பகுத்தறிவுத் தந்தையின் மற்றொரு கொள்கை முழக்கத்தைப் பாருங்கள்.

'பெண் இல்லாமலும் ஆண் வாழ்ந்தாலும் வாழலாம். ஆனால் ஆண் இல்லாமல் பெண் வாழ முடியாதென்று ஒவ்வொரு பெண்ணும் கருதிக்கொண்டிருக்கிறாள். அப்படி அவர்கள் கருதுவதற்கு என்ன காரணம் என்று பார்ப்போமேயானால் பெண்களுக்கு பிள்ளைகள் பெறும் தொல்லை ஒன்று இருப்பதனால் தாங்கள் ஆண்கள் இல்லாமல் வாழ முடியும் என்பதை ருசுப்படுத்திக் கொள்ள முடியாதவர்களாயிருக்கிறார்கள்.

ஆண்களுக்கு அந்த தொந்தரவு இல்லாததால் தாங்க் பெண்கள் இல்லாமல் வாழ முடியும் என்று செல்ல இடமுற்றவர்களாயிருக்கிறார்கள். அன்றியும் அப்பிள்ளை பெறும் தொல்லையால் அவர்களுக்கு பிறர் உதவி வேண்டியிருப்பதால் அங்கு ஆண்களக்கு ஆதிக்கம் ஏற்பட அடமுண்டாகி விடுகிறது. எனவே உண்மையான பெண்கள் விடுதலைக்குப் பிள்ளை பெறும் தொல்லை அடியோடு ஒழிந்து போகவேண்டும்'. (குடியரசு 12, 8, 2, 3, 10:3)

பெண்கள் பிள்ளை பெறக் கூடாது என்பது பெரியாரின் பகுத்தறிவுச் சிதறல்களில் ஒன்று.

பெண்கள் திருமணம் செய்யாவிட்டாலும் கர்ப்பமடைந்து குழந்தைகள் பெறாவிட்டாலும் உடல் ரீதியாக அவர்களுக்குப் பலவிதமான கோளாறுகள் ஏற்படவும் இது காரணமாக அமையும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பெரியார் வாழ்ந்த காலத்திலேயே இந்த உண்மையை மனிதன் கண்டுபிடித்துவிட்டான்.

இந்த அறிவியல் உண்மைக்கு எதிராக, பெண்களுக்குப் பெருங்கேடு விளைவிக்கும் இக்கருத்தை பகுத்தறிவு சார்ந்தது என்று ஏற்றுக் கொள்ள முடியுமா?

மேலும் பெண்கள் பிள்ளை பெறாவிட்டால் நாம் வாழும் காலத்தோடு மனித குலம் அழிந்து போய்விடும். ஒட்டுமொத்த மனித குலத்தையும் அழிக்கும் இந்த ஆபத்தான சிந்தனையில் என்ன பகுத்தறிவு உள்ளது? என்ன அறிவியல் உள்ளது?

பெரியாரை பகுத்தறிவு தந்தையாக ஏற்றுக்கொள்ளும் வீரமணி வகையறாக்களும் மிஃராஜ் பற்றி விமர்சித்த விமர்சகரும் பிள்ளைகள் பெற்றதில்லையா? தங்கள் புதல்விகளுக்குத் திருமணம் செய்து கொடுத்துவிட்டு அவர்களுக்குப் பிள்ளை பிறக்கக் கூடாது என்றுதான் விரும்புவார்களா? பிள்ளை பெற வேண்டாம் என்ற அறிவுரையைத்தான் பிள்ளைகளுக்குக் கூறுவார்களா?

உலகில் உள்ள மூளையுள்ள ஒரு மனிதன் கூட இந்த கருத்தை மடமை என்றுதான் கூறுவான் நடைமுறை சாத்தியமற்றது என்று எடுத்த எடுப்பிலேயே கூறிவிடுவான்.

பெண்களின் உடல் நலனுக்கும் மனித குல நலனுக்கும் இது மிகவும் ஆபத்தானது என்பதை அறிவுடைய ஒவ்வொருவரும் கூறுவார்கள்.

மதங்களில் சொல்லப்பட்டதற்கு அறவியல் ஆதாரம் கேட்கும் போலி பகுத்தறிவாளர்கள், பெரியாரின் இந்த கருத்தை அறிவியல் துணை கொண்டு நிரூபிப்பார்களா?

'பொதுவாக பெண்களின் விடுதலைக்கும் சுயேச்சைக்குமே கர்ப்பம் விரோதியாயிருப்பதால் சாதாரணமாய்ப் பெண்கள் பிள்ளைகளைப்' பெறுவது என்பதை அடியோடு நிறுத்திவிட வேண்டும் என்கிறோம்.

...அதனால்தான் நாம் கண்டிப்பாய்ப் பெண்கள் பிள்ளைபெறுவதை நிறுத்தியே ஆகவேண்டும் என்கிறோம்.

எனவே உண்மையான பெண்கள் விடுதலைக்குப் பிள்ளை பெறும் தொல்ல அடியோடு ஒழிந்து போக வேண்டும். அது ஒழியாமல் சம்பளம் கொடுத்து புருஷனை வைத்துக் கொள்வதாயிருந்தாலும் பெண்கள் பொதுவாக உண்மை விடுதலை அடைந்துவிட முடியாது என்றே சொல்வோம்.

பெண்கள் பிள்ளை பெறும் தொல்லையில் இருந்து விடுதலையாக வேண்டும் என்கின்ற மார்க்கத்தைத் தவிர வேறு எந்த வகையிலும் ஆண்மை அழியாது என்பதோடு, பெண்களுக்கு விடுதலையும் இல்ல என்கின்ற முடிவு நமக்கு கல் போன்ற உறுதியுடையதாய் இருக்கின்றது' என்றெல்லாம் பெண் அடிமையாளன்? என்ற நூலில் பயங்கர ஆராய்சி செய்து பெரியார் கண்டுபிடித்து்ளார்.

இதனால் ஏற்படும் அழிவையும் அவர் ஒப்புக் கொண்டே இந்த அழிவுக் கொள்கைக்கு மக்களை அழைத்தார். அதே நூலில் அவர் கூறுவதைக் கேளுங்கள்!

'பெண்கள் பிள்ளை பெறுவதை நிறுத்திவிட்டால் உலகம் விருத்தியாகாது. மானிட வர்க்கம் விருத்தியாகாது என்று தர்ம நியாயம் பேச விலர் வருவார்கள். உலகம் விருத்தியாகாவிட்டால் பெண்களுக்கு என்ன கஷ்டம் வரும்? மானிட வர்க்கம் பெருகாவிட்டால் பெண்களுக்கு என்ன ஆபத்து எற்பட்டுவிடக்கூடும். அல்லது இந்த தர்ம நியாயம் பேசுபவர்களுக்குத்தான் என்ன கஷ்டம் உண்டாகிவிடும் என்பது நமக்குப் புரியவில்லை.இதுவரையில் பெருகிக் கொண்டு வந்த மானிட வர்க்கத்தால் ஏற்பட்ட நன்மைதான் என்ன என்பதும் நமக்குப் புரியவில்லை'

என்றெல்லாம் உலகத்தை அழித்தொழிக்க அற்புதமான வழியை ஆராய்ந்து கண்டுபிடித்த அதில் கல்லுப் போன்ற உறுதியுடனும் பெரியார் இருந்துள்ளார்.

போலி பகுத்தவூதிகள் தர்ம நியாயத்தின் பக்கம் நின்று பிள்ளை பெறுவது ஏன்? சிலை வணக்கம், சில சடங்குகளை எதிர்த்தார் என்பதைக் கழித்துப் பார்த்தால் அறிவுக்குப் பொருந்தாமல் அதிகம் பேசியவர்கள் பட்டியலில் பெரியார் முக்கிய இடத்தை பிடிக்கின்றார்.

பகுத்தறிவுத் தந்தையின்(?) தத்துவங்கள் இன்னும் வரும் இன்ஷா அல்லாஹ்.


போலி பகுத்தறிவுவாதிகளோடு விவாதிக்க உணர்வு இதழ் அறைகூவல். உண்மை ஏட்டுக்கு பதிலடி பாகம் - 8

போலி பகுத்தறிவுவாதிகளான திராவிடர் கழகத்தினரால் நடத்தப்படும் உண்மை எனும் ஏடு இஸ்லாத்தையும், உணர்வு இதழையும் வம்புக்கு இழுத்ததாலும், முஸ்லிம்களுக்கு உச்சரிக்கை விடுத்ததாலும் போலி பகுத்தறிவுவாதிகளின் மூடநம்பிக்கைகளை அம்பலப்படுத்தும் அவசியத்தை ஏற்படுத்தித் தந்தனர்.

மூடநம்பிக்கையின் மொத்த வடிவமாக போலி பகுத்தறிவுவாதிகள் திகழ்கிறார்கள் என்பதை கடந்த ஏழு வாரங்களாக நாம் விளங்கி வருகிறோம்.

அந்த வகையில் திருமணம் என்பதே ஒழிக்கப்படவேண்டும் என்று பிரச்சாரம் செய்து கொண்டிருந்த காலகட்டத்திலேயே பெரியார் தானே திருமணம் செய்து தனது கொள்கையை மீறினார் என்ற முரண்பாட்டை சென்ற இதழில் நாம் சுட்டிக்காட்டியிருந்தோம்.

அவர் மணியம்மையை திருமணம் செய்ததன் மூலம் தனது மற்றொரு உயிர் மூச்சான கொள்கையையும் தானே குழிதோண்டிப் புதைத்தார். மணியம்மையை திருமணம் செய்தபோது பெரியாரின் வயது 72. மணியம்மையின் வயது 26. அவ்விருவருக்கும் 46 வயது இடைவெளி இருந்த நிலையில்தான் மணியம்மையை திருமணம் செய்து கொண்டார்.

தக்க வயதை அடைந்தவர்கள் மனமொப்பி, வயதில் மூத்தவரை திருமணம் செய்வதை நாம் விமர்சிக்கவில்லை. இளம் பெண்ணை வயதானவர் திருமணம் செய்வது பற்றி பெரியார் என்ன கருத்தை கொண்டிருந்தார் என்ற அடிப்படையிலெயே விமர்சிக்கிறோம்.

மணமக்கள் விஷயத்தில் போதிய வயது முதலிய பொருத்தமில்லாததும், பெண்களின் சம்மதமோ அல்லது ஆணின் சம்மதமோ இல்லாமல் பெற்றோர் தீர்மானம் செய்துவிட்டார்களாதலால் கட்டுப்பட்டுதான் தீரவேண்டும் என்ற நிர்பந்த முறையில் நடப்பதும் சுயமரியாதை அற்ற திருமணம் என்றே சொல்லலாம். (குடியரசு : 3-6-1928 இதழில் பெரியார்)

வயது பொருத்தம் இல்லாத திருமணமும், கட்டாயத் திருமணமும் சுயமரியாதை அற்ற திருமணங்கள் என்பது பெரியாரின் பிரச்சாரமாக இருந்தது.

வயதான சாமியார்கள் இளம் பெண்களை மயக்கி திருமணம் செய்வதைக் கேலி செய்தும், கண்டித்தும் தனது விடுதலை ஏட்டில் அண்ணா அவர்கள் எழுதிய கட்டுரையை வெளியிட்டு மகிழ்ந்தவர் பெரியார்.

தொந்தி சரிய மயிரே வெளிர நிறை தந்த மனைய உடலே படைத்த வயதான ஒரு பார்ப்பனக் கிழவர் துள்ளு மத வேட்கைக் கனையாலே தாக்கப்பட்டு கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார். அவரின் வயது 72.

ஏற்கனவே மணமாகிப் பெண்டைப் பிணமாகக் கண்டவர். பிள்ளை குட்டி பேரன் பேத்தியும் பெற்றவர் இந்த பார்ப்பனக் கிழவர். ஆயினுமென்ன? இருண்ட இந்தியாவில் எத்தனை முறை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாமே' (1940ல் விடுதலை நாளேட்டில் அண்ணா எழுதி பெரியார் வெளியிட்டது)

1940 லி இப்படி எழுதிய பெரியார் அறு ஆண்டுகளில் அந்த பார்ப்பனக் கிழவருக்குப் போட்டியாக பேத்தி வயதுடைய மணியம்மையை மணந்து கொண்டாரே! இப்படி நடப்பதுதான் பகுத்தறிவா?

குடியரசு இதழில் வெளியான கட்டுரையை தேடிப்பிடித்து விடுதலையில் வெளியிடும் பொறுப்பில் இருந்தவர் இராம அரங்கண்ணல்.

தான் பெரிதாக மதிக்கும் பெரியார் பொருந்தாத் திருமணம் செய்ததால் மனம் வெறுத்த அரங்கண்ணல் 'தக்க வயதுப் பொருத்தமே திருமணத்தின் லட்சியம்' என்று கடியரசு ஏட்டில் பெரியார் எழுதியதை எடுத்து விடுதலையில் அச்சிட்டு வெளியாக்கிவிட்டு பணியிலிருந்து விலகினாரே அவர்தான் பகுத்தறிவாளராகவும், சுயமரியாதைக்காரராகவும் காட்சியளிக்கிறார்.

பெரியாரின் பொருந்தாத் திருமணம் அன்றைக்கு ஏற்படுத்திய கொந்தளிப்பை அண்ணா அவர்கள் அன்று எழுதியதிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

அப்பா, அப்பா என்று அந்த அம்மையார் மனம் குளிர வாய் குளிர, கேட்போர் காது குளிர அழைப்பதும் - அம்மா, அம்மா என்று கேட்போர் பூரிப்பும், பெருமையும் அடையும் விதமாக பெரியார் அந்த அம்மையாரை அழைப்பதும் - இக்காட்சியைக் கண்டு 'பெரியாரின் வளர்ப்பு மகள் இந்த மணியம்மை' எனப் பல்லாயிரவர் எண்ணி மகிழ்வதான நிலை இருந்தது.

அந்த வளர்ப்புப் பெண்தான் இன்று பெரியாரின் மனைவியாகி இருக்கிறார். பதிவுத் திருமணமாம்! கையிலே தடி மணமகனுக்கு. கருப்பு உடை மணமகளுக்கு என்று ஊரார் பரிகாசம் செய்கிறார்களே! ' ஊருக்குத் தானய்யா உபதேசம்' என்று இடித்துரைக்கிறார்களே! எனக்கென்ன வயதோ 70க்கு மேலாகிறது. ஒரு காலை வீட்டிலும் ஒரு காலை சுடு காட்டிலும் வைத்துக் கொண்டிருக்கிறேன். 'நான் செத்தால் அழ ஆளில்லை' என்றெல்லாம் பேசிய பெரியார், 'கல்யாணம் செய்து கொள்கிறாரய்யா' என்று கடை வீதி தோறும் பேசிக் கைகொட்டிச் சிரிக்கிறார்களே! வெட்கப்படுகிறோம்.

அயலாரைக் காண வேதனைப் படுகிறோம். தனிமையிலே. பொருந்தாத் திருமணம் செய்துகொள்ளத் துணிபவர்களை எவ்வளவு காரசாரமாக எவ்வளவு ஆவேசமாக கண்டித்திருக்கிறோம்.

இப்போது எவ்வளவு சாதாரணமாக நம்மையும், நமது உணர்ச்சிகளையும் கொள்கைகளையும், இயக்கத்தையும் எவ்வளவு அலட்சியமாகக் கருதி நமது தலைவர் 72ம் வயதிலே திருமணம் செய்து கொள்வதாக அறிவிக்கிறார்.

நம்மை நடைபிணமாக்குவதாகத் தெரிவிக்கிறார். நாட்டு மக்களின் நகைப்புக்கு இடமாக்கி வெட்கி தலைகுனிந்து போங்கள் எனக்கென்ன என்று தெரிவித்துவிட்டார். இதைச் சீர்திருத்தச் செம்மலாகிய தாங்கள் செய்திருப்பது காலத்தால் துடைக்க முடியாத கறை என்பது மறுக்க முடியாதே!

இந்த நிலையை யார்தான் எந்த காரணம் கொண்டுதான் சாதாரணமானதென்று சொல்ல முடியும்? நுற்றுக்கணக்கான மாநாடுகளிலே நமது வீட்டுத் தாய்மார்கள் தமது கரம் பற்றி நின்ற குழந்தைகளுக்குப் பெரியாரைக் காட்டிப் பெருமையாக 'இதோ இந்த தாத்தாவைப் பார்! வணக்கம் சொல்லு' என்று கூறுவர். கேட்டோம் களித்தோம். பக்கத்திலே பணிவிடை செய்து நின்ற மணியம்மையைக் காட்டி தாத்தா பொண்ணு என்று கூறவர். இன்று அந்த தாத்தாவுக்குக் கலியாணம் - பணிவிடை செய்து வந்த பாவையுடன். சரியா, முறையா? என்று உலகம் கேட்கிறது. அன்புள்ள சி. என். அண்ணாதுரை (திராவிட நாடு 3-7-49)

அதிக வயது வித்தியாசம் கொண்ட திருமணத்தை பெரியார் எந்த அளவு கண்டித்திருந்தால் அண்ணா இவ்வளவு கடும் எதிர்ப்பை காட்டியிருப்பார்.

உரத்த குரலில் எடுத்து ஊரெல்லாம் சுற்றினாலும் இனி தலைவர் போக்கால் ஏற்பட்ட கண்ணியக் குறைவை காப்பாற்றிட முடியாது. போறிப் பரப்பி வந்த லட்சியங்களை மண்ணில் வீசும் அளவுக்கு தலைவரின் சுயநலம் கொண்டு போய்விட்டு விட்டது. (அண்ணா - திராவிட நாடு - 21-8-49)

ஒரு கொள்கையால் கவரப்பட்டு அந்த தலைவரின் பின்னே செல்வதை ஏற்றுக் கொள்ளலாம். கொள்கைக்காக தலைவன் மீது கொண்ட பக்கி முற்றிப் போய் கொள்கையை விட தலைவனே பெரிது என்று எண்ணினால் அவர்கள் மூட நம்பிக்கையாளர்களே தவிர பகுத்தறிவாளர்கள் அல்லர்.

பெண்ணினத்துக்காக குரல் கொடுக்கிறார். வயதுப் பெண்களை சாமியார்கள் மயக்குவதைக் கடுமையாகச் சாடுகிறார் என்பன போன்ற என்பன போன்ற காரணங்களுக்காக பெரியாரை தலைவராக ஏற்றவர்கள், பெரியாரே அக்கொள்கைக்கு சாவு மணி அடித்து சமாதி கட்டிய பிறகு அவர் பின்னே சென்றதும், சென்று கொண்டிருப்பது; மூட பக்தியா? சிந்தனைத் தெளிவா?

அண்ணாவையும் அவருடன் வெளியேறியவர்களையும்தான் இந்த வகையில் பகுத்தறிவாளர்கள் என்று கூறலாமே தவிர இதன் பின்னரும் 'பகுத்தறிவுத் தந்தை' என்று பட்டம் சூட்டித் திரிபவர்களை பெரியாருக்கு கடவுள் அந்தஸ்து கொடுக்கும் பக்தர்களாகத்தான் கருத முடியும்.

ஒருவர் மீது குருட்டுத் தனமாக ஒருவன் அன்பு வைத்து அவர் செய்த எந்தச் செயலும் அவனைப் பாதிக்கவில்லை என்றால் அவன் ஒருக்காலும் பகுத்தறிவை பயன்படுத்துபவனாக ஆக முடியாது.

போலி பகுத்தறிவு வாத்களிடம் நாம் கேட்கிறோம், பெரியார் செய்தது பொல இன்று ஒரு 75 வயதுக் கிழவன் இருபது வயது குமரியை மணப்பது குறித்து உங்கள் பகுத்தறிவின் தீர்ப்பு என்ன?

இதுபோல் நடக்கும் திருமணங்களை இன்றும் கூட கேலி செய்து உங்கள் பத்திரிக்கைகளில் எழுதுகிறீர்களே! இதில் உங்கள் பகுததறிவு தத்துவம் தான் என்ன?

பெரியாரைத் தவிர வேறு யாரும் இதைச் செய்தால் நாங்கள் எதிர்ப்போம்! கிண்டல் பண்ணுவோம்! என்று நடப்பதுதான் பகுத்தறிவா?
இன்னும் வரும் இன்ஷா அல்லாஹ்


போலி பகுத்தறிவுவாதிகளோடு விவாதிக்க உணர்வு இதழ் அறைகூவல். உண்மை ஏட்டுக்கு பதிலடி பாகம் - 7

பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியீடு ஒன்றில் திருமணம் பற்றிக் கூறப்படும் மேலும் சில செய்திகளைப் பார்ப்போம்

திருமணம் முறையானது காட்டுமிராண்டிக் காலத்தில் அதாவது 3000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டதாகும். அதை இன்றைக்கும் மனிதன் எதற்காக கடைப்பிடிக்க வேண்டும்? ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணை அடிமைப் படுத்தவே திருமணம் நடைபெறுகிறது. கோயிலுக்கு எப்படி மிருகங்களைப் பலி கொடுக்கிறார்களோ அது போலவே பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்!

இந்த நாட்டின் மக்கள் தொகையில் சரி பாதியான பெண்கள் இனத்தை எதற்காக இப்படிக் கொடுமைப்படுத்த வேண்டும்? இந்தத் திருமண முறை பெரிதும் சுயநலத்துக்காகவே ஒழிய, பொது நலத்துக்கு அல்லவே புருஷனுடைய வேலை பெண்டாட் டியைப் பாதுகாப்பதும், பெண்டாட்டி புரு ஷனைப் பாதுகாப்பதும், இருவருக்கும் குட்டிகள் ஏற்பட்டால், அவற்றை இரண்டு பேருமே சேர்ந்து காப்பாற்றவும்தான் பயன்படுகிறதே ஒழிய சமுதாயத்துக்குப் பயன்படுவதே இல்லை.

அடுத்த வீடு நெருப்புப் பிடித்தாலும் அதுபற்றிக் கவலைப்பட மாட்டான். ஒரு வாளி தண்ணீர் கொடுப்பான். ஆனால் அது அவன் வீட்டுக்குத் தீ பரவாது இருக் கட்டும் என்பதற்காகவேயாகும். ஆண்களும், பெண்களும் இத்தகைய தொல்லையில் மாட்டிக் கொள்ளாமல், படித்து ஆராய்ந்து விஞ்ஞான அதிசய அற்புதங்களை எல்லாம் கண்டுபிடித்து மேன்மை அடைய வேண்டாமா? அதனை அடுத்து, புருஷன் பெண்டாட்டியாகி தனிக்குடித் தனம், தனிச் சமையல் என்று ஆக்கிக் கொண்டு, பொதுநல உணர்ச்சி அற்றவர்களாகவே ஆகிவிடுகின்றார்கள்.

உலகம் வளர்ச்சி அடைய வேண்டுமானால், உலகம் தொல்லையில்லாமல் சுபிட்சம் அடைய வேண்டுமானால் திருமணம் என்பதைக் கிரிமினல் குற்றமாக்கி விட வேண்டும். இன்று இல்லாவிட்டாலும் பிறகு வந்தே தீரும். நான் சொன்னது நடக்காமல் இருக்கவில்லையே! எனவே திருமணத்துறையில் மாற்றம் ஏற்பட்டாக வேண்டும். சம எண்ணிக்கையுடையதும் சம உரிமைகளைப் பெற வேண்டியதுமான ஜீவன்களை இப்படிக் கொடுமைப்படுத் துவது மிகவும் அக்கிரமமாகும்.

பெற்றோர்கள் தங்கள் பெண்களை 22 வயது வரைக்கும் நன்றாகப் படிக்க வைக்க வேண்டும். பிறகு ஒரு தொழிலும் கிடைக்கச் செய்த பிறகே வாழ்க்கைத் துணையைப் பற்றி நினைக்க வேண்டும். அதுவும் அந்தப் பெண்ணாகப் பார்த்து ஒரு ஆணைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டுமே ஒழிய பெற்றோர்கள் குறுக் கிடக் கூடாது!

திருமணம் என்பது மனிதத் தன்மைக் காக ஏற்படவில்லை. மனிதன் பெண்களை அடிமை கொள்ளவே ஏற்பட்டது. உலகில் கற்பு, காதல் என்பன போன்ற வார்த்தைகள், எப்படிப் பெண் ஆள வேண்டும் என்று ஏற்படுத்தி பயன்படுத்தப்பட்டு வருகின்றனவோ அது போலவேதான் ஒழுக்கம் என்னும் வார்த்தையும் எளியோரை யும் பாமர மக்களையும் ஏமாற்றி, மற்றவர் கள் வாழப் பயன்படுத்திவரும் ஒரு சூழ்ச்சி ஆயுதமே அல்லாமல் அதில் உண்மையோ, சத்தோ ஒன்றுமே கிடையாது...

எனவே பெண்ணடிமை ஒழிய, திருமண முறை ஒழிந்தாக வேண்டும். அதோடு மட்டுமல்ல மனிதன் சுதந்திர மனிதனாக இருக்க வேண்டும் என்றாலும், இந்தத் திருமண முறை ஒழிந்தே ஆக வேண்டும்


(-தந்தை பெரியார், உயர் எண்ணங்கள், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியீடு)

திருமணங்களில் சடங்குகள் சம்பிர தாயங்கள் உள்ளன என்பதற்காக பெரியார் திருமணத்தை எதிர்க்கவில்லை. திருமணத்தினால் பெண்கள் அடிமைப்ப டுத்தப்படுகிறார்கள் என்பதால்தான் திரு மணமே கூடாது என்றார். சடங்குகள் இல்லாமல் நடத்தப்படும் சுயமரியாதை (?) திருமணங்களையும்கூட பெரியார் கிரிமினல் குற்றமாக்க வேண்டும் என்று கூறியுள்ளதையும் மேலே காணலாம்.

பகுத்தறிவு ஆராய்ச்சிப்படி திருமணம் என்ற முறையே தவறு என்றால் ஆடு மாடுகளைப்போல தேவைக்கேற்ப சுகம் அனுபவித்துக் கொள்ள வேண்டும் என்பது பகுத்தறிவுத் தந்தையின் கண்டு பிடிப்பு.

பெரியாரும் நாகம்மை என்ற பெண்ணைத் திருமணம் செய்திருந்தார். அந்தத் திருமணம் பற்றி கேள்வி கேட்க முடியாது. ஏனெனில் இந்தத் திருமணம் இது போன்ற பிரச்சாரத்தை பெரியார் செய்வதற்கு முன்னர் நடந்த திருமணமாகும்.

ஆனால் நாகம்மையார் மரணித்த பிறகு பெரியார் மணியம்மை என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்தாரே! அந்தத் திருமணம் செய்த போது திருமணமே கூடாது என்ற பிரச்சாரத்தை செய்து வந்தார்.

பெரியார் திருமணம் செய்து கொண்ட தன் மூலம் தனக்குத் தானே முரண்பட்டார். அது மட்டுமின்றி பெரியார் இவ்வாறு கூறியது மடத்தனமானது. அறவே சிந்த னையற்றவனின் கூற்று எனச் சொல்லா மல் பெண்ணுரிமைக்காக பெரியார் பாடு பட்டதாகக் கூறும் போதெல்லாம் மேற் கண்ட பெரியாரின் தத்துவங்களை போலி பகுத்தறிவுவாதிகள் மேற்கோளாக எடுத் துக் காட்டுகின்றனர்.

பெரியாரின் இந்தக் கருத்துக்களில் தான் பெண்ணுரிமை அடங்கியுள்ளது என்று கருதக் கூடிய போலி பகுத்தறிவு வாதிகள், தாங்கள் திருமணம் செய்து கொண்டது ஏன்? வீரமணியிலிருந்து கலைஞர்வரை அனைத்து பெரியாரின் சீடர்களும் திருமணம் செய்து கொண்டது ஏன்?

திருமணமே கூடாது என்று பிரச்சாரம் செய்த கால கட்டத்தில் பலருக்கு பெரியார் திருமணமும் நடத்தி வைத்திருக்கிறார் என்பதையும் நாம் மறந்துவிட முடியாது.

தனக்குத்தானே முரண்படுபவர் யாராக இருந்தாலும் அவர் ஒருக்காலும் பகுத்தறி வாளராக இருக்க முடியாது. ஒருவர் தனக்குத் தானே முரண்பட்டதை வைத்து ஒருவரது பகுத்தறிவை எடை போடாமல் அந்த முரண்பாட்டைத் தூக்கிப் பிடிப்பதும் பகுத்தறிவாளர்களின் செயலாக இருக்க முடியாது.

போலி பகுத்தறிவுவாதிகள் இதற்கு சொல்லக் கூடிய எந்த விளக்கமும் எந்த வாதமும் பகுத்தறிவுக்கு வெளியே நின்று செய்யும் வாதமாகவே இருக்கிறது.

எந்த ஒரு சித்தாந்தமாக இருந்தாலும் அது அறிவுப்பூர்வமானதாகவும் பகுத்தறி வுக்கு ஏற்றதாகவும் இருந்தால் அதை மிகச் சிலராவது கடைப்பிடிப்பார்கள். குறைந்தபட்சம் அக்கொள்கையை முன்னெடுத்துச் செல்பவர்களாவது அதைக் கடைப்பிடித்துக் காட்டுவார்கள்.

ஆனால் திருமணமே செய்யக் கூடாது என்ற பெரியாரின் கருத்தை ஒரே ஒருவர் கூட பெரியார் சொன்ன தத்துவத்துக்காக கடைபிடிக்கவில்லை.

ஆண்மை இல்லை என்பதற்காக சிலர் திருமணம் செய்யாமல் இருந்திருக்கலாம். இது பெரியாருக்கு முன்பே இருந்த நிலை தான்.

வேசித் தொழில் செய்பவர்கள் திருமணம் செய்யாமல் இருந்திருக்கிறார்கள். இதுவும் பெரியாரின் தத்துவத்தின் காரணமாக அல்ல. பெரியாருக்கு முன்பே அத்தகையோர் இப்படித்தான் இருந்தனர்.

வேறு பல பொறுப்புகளைச் சுமப்ப தற்கு முதலிடம் கொடுத்த பலரும் திருமணம் செய்யாமல் உள்ளனர். இதுவும் ஆரம்ப காலம் முதல் உள்ள நிலைமை தான்.

ஒரு மனிதன் கூறும் தத்துவம், அதுவும் தீவிரமாக தொடர்ந்து வலியுறுத்திப் பேசும் தத்துவம் அவராலும் கடைப்பிடிக்கப்படவில்லை. அவரது வலது இடது கரங்களாக உள்ளவர்களாலும் கடைப் பிடிக்கப்படவில்லை. அவரை மதிக்கும் ஒரே ஒருவராலும் கடைப்பிடிக்க முடிய வில்லை என்றால் இது வடிகட்டிய மடமை என்றுதானே கூற வேண்டும்?

பார்ப்பனர்கள் தவறான அறிவுக்குப் பொருந்தாத கருத்தைச் சொன்னார்கள் என்பதற்காக அவர்கள் மீது பாய்ந்து பிராண்டும் போலி பகுத்தறிவுவாதிகள் அதே வேகத்துடன் இந்தக் கருத்துக்கு எதிராக பாய்ந்ததுண்டா? இந்தக் கருத்தைச் சொன்னவர் மீது பாய்ந்ததுண்டா?

இந்தப் போக்கில் சிந்தனைத் தெளிவோ நடுநிலை நோக்கோ உள்ளதா என்று போலி பகுத்தறிவுவாதிகளை நாம் கேட்கிறோம்.

மிகச் சில பேர் இதுபற்றி விமர்சித்துள்ளனர். சொல்லுக்கும் செயலுக்குமிடையே இடைவெளி இல்லாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்று மென்மையான முறையில் தடவிக் கொடுத்து விமர்சித் துள்ளனர்.

சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடு என்பது சில விஷயங்களில் அனைவரிடமும் இருக்கும். ஆனால் அடிப்படைக் கொள்கைகளில் உயிர்நாடியாகக் கருதும் கொள்கைகளில் இருக்கக் கூடாது. இது மோசடி, பித்தலாட்டம், மடமை போன்ற சொற்களால் விமர்சிக்கப்பட வேண்டுமே தவிர ஒருவர் மீது ஏற்பட்டுவிட்ட அன் பின் காரணமாக மயிலிறகால் வருடுவது நாணயமான விமர்சனம் ஆகாது.

பெரியாரின் கருத்துக்காக எங்களை எப்படி விமர்சிக்கலாம் என்று நழுவுவதும் நாணயமான நடவடிக்கையாக இருக்க முடியாது.

பெரியாரை போலி பகுத்தறிவுவாதிகள் நேசித்ததைவிட கோடி மடங்கு நபிகள் நாயகத்தை முஸ்லிம்கள் நேசிக்கிறார்கள். அவ்வாறு இருக்கும்போது உணர்வில் எழுதிய ஒரு தகவலை மறுக்கிறேன் என்ற பெயரில் நபிகள் நாயகத்தையும் நபிகள் நாயகம் தொடர்புடைய மிஹ்ராஜ் பயணத்தையும் கேலி செய்வதில் உள்ள நியாயத்தைவிட பெரியாரின் தவறான கருத்துக்களை விமர்சனம் செய்வது எந்த வகையிலும் குறைந்ததல்ல.

கிருஷ்ணரோ, இராமரோ செய்ததாகச் சொல்லப்பட்டவைகளுக்காக இன்றைய இந்துக்களை இவர்கள் விமர்சிப்பதில் உள்ளதை விட பெரியார் சொன்னதற்காக அவரது பிள்ளைகளை விமர்சிப்பதில் அதிக நியாயம் உள்ளது. ஏனெனில் இவர்கள்தான் தங்களைப் பகுத்தறிவின் ஏஜெண்டுகளாக அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள்.

பெரியாரின் இந்தக் கருத்தை இவர்களில் சிலர் வருடிக் கொடுத்து விமர்சிப்பது போல், நாடகமாடுவதுபோல் இந்து மதத்திலும் இராமர், கிருஷ்ணரை வருடிக் கொடுத்து விமர்சிப்பவர்கள் இருந்தனர். இன்றும் இருக்கின்றனர்.

எனவே தனக்குத்தானே முரண்பட்டு பெரியார் கூறியது சரி என்றால் அது பற்றி பகிரங்க விவாதத்துக்கு முன் வர வேண்டும்.

இல்லாவிட்டால் இந்த மடமையை அதற்குரிய கடுமையான சொற்களால் விமர்சித்து பெரியாரின் இந்த மூடக் கருத்தை நிராகரிக்கிறோம் என்று அறிவிக்க வேண்டும்.

தனக்குத்தானே முரண்படும் இவர்களின் மடமையை இன்ஷா அல்லாஹ் இன்னும் வெளிப்படுத்துவோம்.


போலி பகுத்தறிவுவாதிகளோடு விவாதிக்க உணர்வு இதழ் அறைகூவல். உண்மை ஏட்டுக்கு பதிலடி பாகம் - 6

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விண்வெளிப் பயணம் குறித்து கிண்டலடித்து முஸ்லிம்களுக்கு எச்சரிக்கை விடுத்து திராவிடக் கழகத்தின் உண்மை எனும் பொய் ஏடு முஸ்லிம்களையும் உணர்வு இதழையும் வம்புக்கு இழுத்திருந்தது.

எனவே பகுத்தறிவு வேடம் போட்டுத் திரியும் இவர்கள்தான் உண்மையில் மூட நம்பிக்கையாளர்கள் என்பதைத் தக்க காரணங்களுடன் கடந்த ஐந்து வாரங்களாக நாம் அம்பலப்படுத்தி வருகின்றோம்.

அதன் தொடர்ச்சியாக மேலும் சில கேள்விகளை முன் வைக்கிறோம்.

ஒரு மனிதன் பகுத்தறிவாளன் என முடிவு செய்வதாக இருந்தால் அல்லது ஒரு இயக்கம் பகுத்தறிவுடன் செயல்படுகிறது என முடிவு செய்வதாக இருந்தால் அதற்கு சில அடிப்படைத் தகுதிகள் இருந்தாக வேண்டும்.

அதில் மிக முக்கியமான தகுதி, தனக்குத்தானே முரண்படாமல் இருப்பதாகும். தான் பிரச்சாரம் செய்துவரும் கருத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஒருவன் தானே மறுத்தால் அவனிடம் பகுத்தறிவும், தெளிவான சிந்தனையும் இல்லை என்று எளிதாக முடிவு செய்துவிடலாம்.

போலி பகுத்தறிவுவாதிகளின் பிரச்சாரத்தையும், அவர்களின் நடவடிக்கைகளை நாம் கவனித்தால் மத நம்பிக்கையுடையவர்களைவிட அதிக முரண்பாடு உடையவர்களாக அவர்கள் இருப்பதைக் காணலாம்.

திருமணமும் பகுத்தறிவும்.

திருமணம் என்னும் பந்தத்தின் மூலம் ஆணும் பெண்ணும் இணைந்து ஒரு குடும்பமாக உருவாகிறார்கள். திருமணம் செய்வது பகுத்தறிவுக்கு ஏற்றதா இல்லையா என்று போலி பகுத்தறிவுவாதிகள் பயங்கர ஆராய்ச்சியில் இறங்கி திருமணம் என்பது ஒழிக்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர்.

இதுபற்றி போலி பகுத்தறிவுவாதிகளின் தலைவர் பெரியார் அவர்கள் ஆணித்தரமாக கூறுவதைக் கேளுங்கள்.

மதமும் கடவுள் சங்கதியும் மனித சமூகத்தின் வளர்ச்சியை பெரிதும் தடுத்து நிறுத்திவிட்டன. குறிப்பாக, பெண்கள் சங்கதியை எடுத்துக் கொள்ளுங்கள். பார்ப்பான் நம்மை எப்படி கீழ்சாதி என்று கூறி அடிமை வேலை வாங்குகிறானோ, அதைப் போலத்தான் மக்களின் சரிபகுதி எண்ணிக்கையுள்ள பெண்களை நடத்தி வருகிறோம். பெண்கள் என்றால் வெறும் குட்டிபோடும் கருவி என்றுதான் நடத்தி வருகிறோம். பெண்களும் கணவன்மார்கள் நகை நட்டு வாங்கிக் கொடுத்தால் போதும் என்கிற அளவுக்கு தங்களைக் குறுக்கிக் கொண்டுவிட்டார்கள்.

பிராமணன் - சூத்திரன் என்ற அமைப்புக்கும் பேதத்திற்கும் புருஷன் - பெண்டாட்டி என்ற விகிதத்திற்கும் எந்தவித வேறுபாடும் கிடையாதே! உலகத்திற்கு பயன்படும்படியான பேர்பாதி மனித சக்தியை, பெண்ணடிமை மூலம் நாம் விரயப்படுத்திக்கொண்டு இருக்கிறோம். இதற்கு ஒரு பரிகாரம் என்ன என்றால் 'கலியாணம்' என்பதையே சட்ட விரோதமாக ஆக்கவேண்டும். இந்த கலியாணம் என்ற அமைப்பு முறை இருப்பதால்தான் கணவன்-மனைவி என்ற உறவும், பெண் அடிமைத் தன்மையும் உருவாகிறது. இந்த கலியாண முறை இருப்பதால்தானே குழந்தை குட்டிகள் - அவற்றுக்குச் சொத்து சம்பாதிப்பது - அதுவும் எதைச் செய்தாவது சம்பாதிப்பது என்ற சமுதாய ஒழுக்கக் கேடுகள் எல்லாம் ஏற்படுகின்றன. இந்த கலியாண முறையை இந்த நாட்டில் ஏற்படுத்தியதே பார்ப்பனர்தான். சாஸ்திரங்களில் சூத்திரனுக்கு கலியாண முறையே இல்லையே! - (விடுதலை 28-06-1973)


இந்த மாதிரி வாழ்க்கைத்துணை ஒப்பந்த முறையைக்கூட கிரிமினல் ஆக்கவேண்டுமென்று இப்போது (89ஆம் வயதில்) நான் எடுத்துச் சொல்லிக் கொண்டு வருகிறேன். கலியாணமென்று சொன்னாலே அது கிரிமினல் சட்டப்படி தவறாக வேண்டும். அந்த கொடுமையினாலே மனித வளர்ச்சி தடைபட்டுக் கிடக்கிறது. - (விடுதலை 16-11-1967)

'எப்படி மனிதன் மனிதனை அடிமை கொள்ளுவதைத் தவறு, சட்டப்படி குற்றமான காரியம் என்று ஆக்கியிருக்கின்றோமோ அதேபோல மனிதன் பெண்களைத் திருமணம் என்ற பெயரால் அடிமையாக்கிக் கொள்வதைச் சட்டப்படியான குற்றம் என்று செய்யவேண்டும். (விடுதலை 02-05-1973)

'இந்த கலியாண முறைகள் இருப்பதால்தானே குழந்தை குட்டிகள் அவற்றுக்குச் சொத்து சம்பாதிப்பது - அதுவும் எதைச் செய்தாவது சம்பாதிப்பது என்ற சமுதாய ஒழுக்கக் கேடுகள் எல்லாம் ஏற்படுகின்றன. மந்திரி ஆகிறவன்கூட கலெக்டர் ஆகிறவன்கூடப் பெண்டாட்டி பிள்ளையைக் காப்பாற்றத்தான் இருக்கிறான். இந்த வகையில் அமைப்பு முறை என்றால் உலகத்தைப் பற்றியோ, சமுதாயத்தைப் பற்றியோ எவன் கவலைப்படுகின்றான்? பொது உணர்ச்சி எப்படி ஏற்படும்? அவனவன் சொந்த வாழ்க்கைப் பிரச்சனைக்கே ஈடுகொடுத்துக் கொண்டு இருப்பதென்றால் சமுதாய உணர்ச்சி எப்படி ஏற்பட முடியும். (விடுதலை 27-06-1973)

பெரியார் கூறும் கருத்துக்களின் தொகுப்புகளில் மேலும் சிலவற்றை வரும் வாரங்களில் பார்க்கலாம். பின்னர் இக்கருத்துக்களில் அவர் எப்படியெல்லாம் முரண்படுகிறார் என்பதையும் விரிவாக அலசலாம்.
இன்ஷா அல்லாஹ்...


போலி பகுத்தறிவுவாதிகளோடு விவாதிக்க உணர்வு இதழ் அறைகூவல். உண்மை ஏட்டுக்கு பதிலடி பாகம் - 5

கடவுள் இல்லை என்று ஒருபுறம் கூறிக்கொள்ளும் போலி பகுத்தறிவுவாதிகள் இன்னொருபுறம் கடவுளுக்கு தமிழில் அர்ச்சனை செய்யவேண்டுமெனவும் கூறிவருகின்றனர்.

கடவுள் இல்லையென்றால் அதற்கு அர்ச்சனை செய்வதை - எந்த மொழியில் இருந்தாலும் - அதை எதிர்க்க வேண்டும். அர்ச்சனை செய்து மூடர்களாக ஆகாதீர்கள் என்று கூறி மக்களை விழிப்படையச் செய்திருக்க வேண்டும். நேர்மையான - சமரசம் செய்து கொள்ளாத - பகுத்தறிவு இப்டித்தான் தீர்ப்பளிக்கும்.

தமிழ் மொழியில் அர்ச்சனை செய்ய வேண்டும் எனக் கூறுவதும் அதை வரவேற்பதும் எந்த வகையில் பகுத்தறிவு சார்ந்ததாகும்?

இதற்கு போலிப் பகுத்தறிவுவாதிகள் கூறுகின்ற காரணங்கள் யாவும் பகுத்தறிவுக்கு வெளியே நின்று கொண்டு கூறுகின்ற காரணங்களாகவே உள்ளன.

பகுத்தறிவுக்கு இது ஒவ்வாத செயல்தான்! பார்ப்பனரை பழி தீர்க்க இது அவசியம் என்று கூறுவார்களானால் இந்த வகையில் இவர்களும் மதவாதிகளைபப் போல்தானே நடக்கின்றனர்.

இன உணர்வு, பழி வாங்கும் போக்கு ஆகியவற்றின் அடிப்படையில் இல்லாத கடவுளுக்கு தமிழில் அர்ச்சனை செய்வது அனைத்து மூட நம்பிக்கைகளையும் மிஞ்சிய மூட நம்பிக்கையல்லவா?

இல்லாத கடவுளுக்கு தமிழில் அர்ச்சனை செய்வது பகுத்தறிவுக்கு அல்லது அறிவியலுக்கு உட்பட்டதுதான் என்பதை நிருபிக்க போலி பகுத்தறிவுவாதிகள் தயாரா என்று அறைகூவல் விடுக்கின்றோம்.

கடவுளின் பெயரால் பண விரயம்

இல்லாத கடவுளை உருவாக்கிக் கொள்வதுடன் கடவுளுக்காக அபிஷேகம் என்ற பெயரில் பொருட்களை பாழாக்காலாமா என்று போலிப் பகுத்தறிவுவாதிகள் மேடை போட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்த பிரச்சாரத்தில் இவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதை முஸ்லிம்களாகிய நாமும் வரவேற்போம். ஆனால் எதை பகுத்தறிவுக்கு ஒவ்வாத செயல் என்று இவர்கள் சித்தரித்தார்களோ, அதுபோன்ற காரியங்களை இவர்களே செய்தும் வருகின்றனர்.

சமீபத்தில் இவர்கள் நடத்தும் விடுதலை 05-08-2008 நாளேட்டில் படத்துடன் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளனர்.

'புதுச்சேரியில் பஞ்ச முக ஆஞ்சநேயருக்கு 1001 லிட்டர் பாலை அபிஷேகம் செய்து பாலை வீணாக்கியுள்ளனர். எத்தனையோ குழந்தைகள் சத்துணவுக் குறைவாலும் பசியாலும் அவதியுறும்போது இப்படி பாலை வீணாக்கலாமா' என்றெல்லாம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். நல்ல கேள்விகள்தான். ஆனால் அதற்கு மறுநாள் வெளியான விடுதலை நாளேட்டில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளனர்.

சைதை பகுதியில் பெரியார் சிலை நிறுவ தி.க வினர் முடிவு செய்துள்ளார்களாம். அதற்கு முதல் கட்டமாக எம். பி பாலு என்பவர் பத்தாயிரம் ரூபாய் அவரது குடும்பத்தினர் பதினைந்தாயிரம் ரூபாய், மதியழகன் பத்தாயிரம், அவரது குடும்பத்தினர் ஐயாயிரம், தென்றல் பத்தாயிரம், அவரது குடும்பத்தினர் ஐயாயிரம், பத்மநாபன் ஐயாயிரம், இரவி ஆயிரம், பிரபாகரன் ஆயிரம் நிதி வழங்கினார்கள் என்று செய்தி வெளியிட்டுள்ளார்கள்.

இதெல்லாம் முதற்கட்டமாக திரட்டப்பட்ட நிதியாம்.

புதுச்சேரியில் 1001 லிட்டர் பால் அபிஷேகம் செய்தார்கள் என்றால் 50 லிட்டர் பாலுடன் 500 லிட்டர் தண்ணீரை கலந்துதான் அபிஷேகம் செய்திருப்பார்கள். கறந்த பாலை அப்படியே அபிஷேகம் செய்திருக்கமாட்டார்கள்.

ஒரு லிட்டர் பால் பதினெட்டு ரூபாய் என்ற கணக்கின்படி 500 லிட்டர் பால் ஒன்பதாயிரம் ரூபாய் ஆகும். தண்ணீர் அல்லாத பால் என்றால்கூட 1000 லிட்டருக்கு பதினெட்டாயிரம் ரூபாய்தான் ஆகும்.

இந்த பதினெட்டாயிரம் ரூபாயை நூற்றுக்கணக்கான பக்தர்களிடம் ஐந்தும் பத்துமாக திரட்டியிருப்பர்கள். ஒவ்வொரு பக்தனும் நூறு இருநுறு ரூபாயை அதிக பட்சமாக வீணாக்கியிருப்பான்.

ஆனால் மூட நம்பிக்கையின் முதல் அடையாளமான ஒரு கற்சிலையை நிறுவ ஒரு குடும்பமே 25 ஆயிரம் (பதினைந்தாயிரம், பத்தாயிரம்) என்று கொடுக்கும் அளவுக்கு பயங்கர சிந்தனையாளர்களாக இருக்கிறார்களே? இந்த பகுத்தறிவைக்கண்டு புல்லரிக்கிறது போங்கள்!

பாலுக்காக செலவிட்ட பணத்தை மட்டும்தான் ஏழைக் குழந்தைகளின் உணவுக்கு செலவிட முடியுமா? கல்லுக்காக செலவிட்ட பல்லாயிரம் ரூபாய்களைக் கொண்டு வறுமையை விரட்டியிருக்கலாமே! ஏழைக் குழந்தைகளின் பசியைப் போக்கியிருக்கலாமே!

அதுகூட மதவாதிகளுக்குதான் சாத்தியமாகும். அக்மார்க் பகுத்தறிவுவாதிகள் ஏழைக் குழந்தைகளுக்கு தான தர்மம் செய்யக்கூடாது என்றுதான் இவர்களின் ஆசான் பெரியார் இவர்களுக்கு போதித்துள்ளார்.

ஆகவே தர்மம் செய்வது அக்கிரமம் என்றும் ஜன சமூகத்துக்கு தொல்லை என்றும் பணக்காரர்களின் அயோக்கியத்தனங்களை மறைக்க ஒரு சூட்சி என்றும் சொல்கிறேன் - குடியரசு 21-04-1945 இதழில் பெரியார்.

கல்லுக்கு அபிஷேகம் செய்தால் அதுவும் மூட நம்பிக்கையாகி விடுகிறது. அந்த பாலை ஏழைகளுக்கு தர்மம் செய்தால் அதுவும் உங்கள் தந்தையின் பர்வையில் அயோக்கியத்தனமாக ஆகிவிடுகின்றது. இந்த இரண்டில் எது பகுத்தறிவு பூர்வமானது?

இவர்களால் விமர்சிக்கப்படும் மதவாதிகளாவது கற்சிலைகளுக்கு பாலை அபிஷேகம் செய்வதற்கு ஒருபுறம் பணத்தை வீணாக்கினாலும் ஏழைக் குழந்தைகளுக்காகவும் தங்கள் நிதியாதாரத்தை செலவிட்டு வருகின்றனர்.
ஆனால் அக்மார்க் பகுத்தறிவாளர்கள் சிலைக்கு மட்டும்தான் செலவு செய்வர்கள். ஏழை எளிய மக்களுக்கு தர்மம் செய்து அயோக்கியர்களாக மாறமாட்டார்கள்.

மக்களுக்கு உதவாத இந்த பகுத்தறிவை விட மக்களுக்கு கருணை காட்டும் அந்த மதவாதிகள் ஆயிரம் மடங்கு சிறந்து விளங்குகிறார்கள்.

பெரியார் பிறந்த (நாளாக இவா்கள் கூறும்) நாட்களின்போதும் இறந்த நாளின் போதும் அவரது சிலைக்காக ராட்சத மலர் மாலைகள் நூற்றுக்கணக்கில் போடப்படுகிறது! இதற்கு ஆகும் செலவு பாலாபிஷேகத்திற்கு ஆகும் செலவை விட பல மடங்கு அதிகமாக உள்ளதே!

பொருளாதாரத்தை நாசமாக்கலாமா என்று நீங்கள் கேட்ட அத்தனை கேள்விகளையும் அதைவிட வலிமையாக இந்துமத மதவாதிகள் உங்களை நோக்கி கேட்க முடியுமே?

மற்றவர்களை நோக்கி நிங்கள் எழுப்பம் கேள்விகள் மட்டும் அறிவு பூர்வமாக இருந்தால் போதுமா? அவர்கள் உங்களை நோக்கி அதே கேள்விகளைக் கேட்கும் நிலைமையில் நீங்கள் இருக்கக்கூடாது என்பது உங்களுக்கு ஏன் புரியவில்லை?

போலிப் பகுத்தறிவுவாதிகளான உங்களைப் பொறுத்தவரை மற்ற எவரையும் விமர்சனம் செய்யும் தகுதி உங்களுக்கு இல்லை என்பதை உணர்ந்து, முதலில் உங்கள் நடவடிக்கைகளைச் சரி செய்யும் வழியைப் பாருங்கள்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்.


போலி பகுத்தறிவுவாதிகளோடு விவாதிக்க உணர்வு இதழ் அறைகூவல். உண்மை ஏட்டுக்கு பதிலடி பாகம் - 4

நோக்கி கேள்வி எழுப்புவோர் அதுபோன்ற கேள்விகள் தம்மை நோக்கி எழாதவாறு தமது கொள்கை கோட்பாடுகளை அமைத்துக் கொள்ளவேண்டும்.

எல்லா மதத்தினர்களையும் மூடர்களாகச் சித்தரித்து கேலி செய்யும் போலி பகுத்தறிவு வாதிகளான திராவிடர் கழகத்தினர், மதவாதிகளை மிஞ்சும் வகையில் மூட நம்பிக்கையில் மூழ்கிக் கிடப்பதை நாம் அம்பலப்படுத்தி வருகின்றோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விண்வெளிப் பயணம் குறித்து அவர்கள் உணர்வு ஏட்டை வம்புக்கு இழுத்ததன் காரணமாகவே அவர்களை அம்பலப்படுத்தும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டோம். கடந்த மூன்று தொடர்களை வாசிக்கத் தவறியவர்களுக்காக இந்த விபரத்தைத் தெரிவிக்கிறோம்.


பகுத்தறிவையும் அறிவியலையும் சுயமரியாதையையும் ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு உணர்வுகளின் அடிப்படையில் போலிப் பகுத்தறிவுவாதிகள் செயல்பட்டு வருகின்றனர் என்பதற்கான மேலும் சில ஆதாரங்களைக் காண்போம்.

கருஞ்சட்டை

தம்மை பகுத்தறிவுவாதிகள் என்று அடையாளப்படுத்தி கருப்புச் சட்டை அணிவதை திராவிடர் கழகத்தினர் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இதைச் செய்யலாம், இதைச் செய்யலாகாது, இதை உண்ணலாம், இதை உண்ணக்கூடாது, என்று மதங்களில் பல்வேறு கட்டளைகள் உள்ளன. அந்தந்த மதத்தில் நம்பிக்கை கொண்டுள்ளவர்கள் அதை கடைபிடித்தும் வருகின்றனர்.
போலிப் பகுத்தறிவுவாதிகள் இதை கிண்டல் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

எல்லா உணவும் உண்பதற்கு உரியது தானே? இதை உண்ணக்கூடாது. இதைத்தான் உண்ண வேண்டும் என்பது மூட நம்பிக்கையில்லையா?

வலது கையால் சாப்பிட வேண்டும், இடது கையால் சாப்பிடக்கூடாது என்று கூறி இடது கையை ஒதுக்குவது மூட நம்பிக்கையில்லையா என்றெல்லாம் பயங்கரமான கேள்விகளை கேட்டு வருகின்றனர். ஒரு சமுதாயத்தினர் தம்மை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக நெற்றியில் திருநூறு இடுவதையும், பூணூல் அணிவதையும் கேலி செய்வதுடன் சில நேரங்களில் பூணூல் அறுப்பதிலும் இவர்கள் இறங்கியதை நாடு அறியும்.
இவர்களின் இந்த நிலைபாடுதான் அறிவு பூர்வமானது என்றால் இந்த நிலைபாட்டை மீறாமல் இவர்கள் நடக்க வேண்டுமன்றோ?

ஆனால் உலகில் எத்தனையோ வண்ண ஆடைகள் இருக்க கறுப்புதான் பகுத்தறிவின் அடையாளம் என்று நடக்கிறார்களே! இதில் ஏதாவது பகுத்தறிவு உள்ளதா?

இவர்கள் பேசும் போலிப் பகுத்தறிவை பச்சை சட்டை போட்டுக் கொண்டு பேசினால் நாக்கு எழாதா?

உலகில் உள்ள எல்லா நிறங்களையும் சோதனைக் கூடத்தில் சோதித்துப் பார்த்து கறுப்பு நிறத்துக்குள் மட்டும்தான் பகுத்தறிவு ஒளிந்து கிடக்கின்றது. மற்ற நிற்களில் மூட நம்பிக்கைதான் ஒளிந்து கிடக்கின்றது என்று கண்டு பிடித்தபின்தான் கறுப்புச் சட்டைக்காரர்களாக அவதாரம் எடுத்தார்களா?

நாங்கள் இந்த கொள்கையுடையவர்கள் அல்லது இந்த இனத்தவர்கள் என்று மற்றவர்கள் அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக பூணூல் அணிவது மூட நம்பிக்கை என்றால், நாங்கள்தான் பகுத்தறிவின் மொத்த வியாபாரிகள் என்பதன் அடையாளமாக கறுப்பச் சட்டை அணிவதும் மூடநம்பிக்கை அல்லாமல் வேறு என்ன?

'இதைச் செய்யாதே! அதைச் செய்யாதே' எனக்கூறி எத்தனையோ இன்பங்களை மனித குலத்துக்குக் கிடைக்காமல் செய்துவிட்டனர் என்று மதத்தவர்களை நோக்கி கேள்வி எழுப்பும் கருஞ்சட்டைகாரர்களே! பல்வேறு வண்ணங்களில் ஆடைகளை அணிந்து அதனால் கிடைக்கும் இன்பங்களை இழந்து விட்டீர்களே!

மதங்களால் இன்பங்களை இழப்பது போல் உங்கள் போலிப் பகுத்தறிவின் காரணமாகவும் எவ்வளவு இன்பங்களை மனிதர்களுக்கு கிடைக்காமல் செய்து விட்டீர்கள்.

என்னதான் பகுத்தறிவு வாதம் பேசினாலும் அறிவியல் என்று கத்தினாலும் நிங்களும் அதைக் கடந்து வெளியே சென்று விடுகிறீர்களே! இதை எண்ணிப் பார்க்க மாட்டீர்களா?

பெரியார் சொன்னார் என்ற குருட்டு பக்திதானே தவிர இதில் பகுத்தறிவோ அறிவியலோ உள்ளதா?

அனைத்து சாதியினரும் அர்ச்சகராவது

கடவுள் இல்லை என்பது தான் போலிப் பகுத்தறிவுவாதிகளின் பிரதானக் கொள்ளை. அதிலும் இந்து மத தெய்வங்கள் பற்றி புராணங்களில் எழுதப் பட்டிருப்பதை காரண காரியத்துடன் பொது மேடையில் இவர்கள் விமர்சனமும் செய்கிறார்கள். கடவுள்களின் கதைகளில் உள்ள ஆபாசத்தையும் அம்பலப்படுத்தி வருகின்றனர்.

கடவள் எனக்கூறி சிலைகளை வழிபடுவதும், அவற்றின் முன்னே உணவைப் படைப்பதும் மூட நம்பிக்கை எனவும் இவர்கள் கூறுகின்றனர்.

பொது இடங்களில் பிள்ளையார் போன்ற சிலைகளுக்கு செருப்பு மாலை அணிவித்தும் செருப்பால் அடித்தும் தமது வெறுப்பை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்கள்.

இந்துமத கடவுள்கள்தான் தீண்டாமையையும், சாதி வேறுபாட்டையும் உருவாக்கியவர்கள் எனவும் இவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த வாதங்களில் அவர்கள் பகுத்தறிவுடன் நடக்கிறார்கள் என்பதை நாம் ஒப்புக் கொள்கிறோம்.

இப்படி ஒருபக்கம் கூறிக்கொண்டு இந்த கல்லுக்கு பூஜை செய்யும் உரிமை அனைவருக்கும் வேண்டும் என்று இவர்கள் கோருகின்றனர்.

ஒரு நம்பிக்கை, ஒரு செயல் தவறு என்றால் அதை ஒழிப்பதில் மட்டும் கவனம் செலுத்துவதுதான் பகுத்தறிவு.

பாண்டிச்சேரிக்காரன் மது அருந்துகின்றான், அது தவறு அதை ஒழிக்க வேண்டும், எனவே தமிழ்நாட்டு மக்களுக்கும் குடிப்பதற்கு ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று ஒருவன் பேசுவதற்கும் உங்கள் பிரச்சாரத்திற்கும் என்ன வித்தியாசம்?

எதை கல் என்று நம்புகிறீர்களோ அதைக் கடவுள் என்று சிலர் நம்புகிறார்கள் என்றால், நீங்கள் நம்புவது போல் அவனையும் நம்ப வைக்கத்தான் பாடுபட வேண்டும்.

அது கல்தான், எல்லோரும் அதை பூஜை செய்ய வேண்டும் என்று கூறினால் ஒரு இனத்தின் மீதான வெறுப்புணர்வுதான் அதன் பினனணியில் உள்ளது, பகுத்தறிவு ஏதும் இல்லை.

இந்துக் கடவுள்களின் ஆபாசக் கதைகளை அதைவிட ஆபாசமாக மேடையில் முழங்கிவிட்டு இவ்வளவு ஆபாசமான கடவுளை என் மக்களும் வழிபட்டு ஆபாசக் கடவுளுக்கு மரியாதை செய்யும் வாய்ப்பு தரவேண்டும் என்று கேட்பதில் பகுத்தறிவோ, அறிவியலோ இருக்கிறதா?

சிலைகளுக்கு முன்னால் உணவுகளைப் படைத்து வீணாக்கலாமா என்று ஒரு பக்கம் பிரச்சாரம் செய்து கொண்டு இவ்வாறு வீணாக்கும் உரிமை என் மக்களுக்கும் வேண்டும் எனக் கேட்பதில் அறிவு பூர்வமான பார்வை ஏதேனும் இருக்கிறதா?

கடவுளின் பெயரால் அர்ச்சனை செய்தால் அதை ஐயர்தான் எடுத்துக் கொள்கிறார், கடவுள் எடுத்துக் கொள்வதில்லை என்று ஒருபுறம் கூறிக்கொண்டு என் மக்களுக்கும் இதுபோல் மக்களை ஏமாற்றும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கேட்பதில் அடங்கியுள்ள பகுத்தறிவு சித்தாந்தம் என்ன?

இந்த முரண்பாட்டின் காரணமாகத்தானே உங்களால் மக்களை வென்றெடுக்க முடியவில்லை.

எது மிகப்பெரிய தவறு என்று சாதிக்கிறார்களோ அதில் மக்களைத் தள்ளும் வகையில் 'அனைத்து சாதியினருக்கும் அர்சகராக வேண்டும்' எனக் கூறி மக்கள் விழிப்புணர்வு அடைவதைத் தடுப்பதில் உள்ள தத்துவம் என்ன? போலிப் பகுத்தறிவுவாதிகள் விளக்கத் தாயாரா?

உணர்ச்சிக்கு இடம் கொடுப்பவர்கள்தான் இதுபோன்ற முரண்பாடான முடிவை எடுக்க முடியுமே தவிர அறிவு பூர்வமாக சிந்திப்பவர்கள் இதுபோல் முடிவு எடுக்கமாட்டார்கள்

மத நிகழ்ச்சிகள் மூலம் வருவாய் ஈட்டுதல்

பெரியாரின் பெயரால் திடலை அமைத்து அதில் மண்டபமும் அமைத்து அதை வாடகைக்கு விட்டு பொருளீட்டி வருகிறார்கள் வீரமணி வகையறாக்கள்.

இவர்கள் எதை எதிர்ப்பதாகக் கூறிக் கொள்கிறார்களோ அந்த மதங்களின் நிகழ்ச்சிக்கு வாடகைக்கு விட்டு மதக் கருத்தைப் பரப்ப துணை நிற்கிறார்களே! இதில் வியாபாரம் - அதுவும் நெறி தவறிய வியாபாரம்தான் உள்ளதே தவிர பகுத்தறிவு ஏதும் இல்லை.

நாம்கூட பெரியார் திடலில் நிகழ்ச்சிகள் நடத்தி இஸ்லாத்தின் கொள்கைகளை பிரச்சாரம் செய்திருக்கின்றோம்.

எதைத் தவறு என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அதை ஒழிப்பதில்தான் பகுத்தறிவும் சுய மரியாதையும் உள்ளது.

காசு வருகிறது என்பதற்காக நாம் எதிர்க்கும் காரியத்தையே நமது இடத்தில் நடத்திக் கொள்ள அனுமதிப்பது மானம் கெட்ட செயலே தவிர சுய மரியாதைக்கு உகந்த செயல் அல்ல.

விபச்சாரம் செய்யக் கூடாது என்று பிரச்சாரம் செய்பவன் எனது வீட்டில் வந்து அதைச் செய்து கொள் என்று கூறினால் அவன் சுய மரியாதை உள்ளவனா?

போலிப் பகுத்தறிவுவாதிகளை இன்னும் அம்பலப்படுத்திவிட்டு நபிகள் நாயகத்தின் விண்வெளிப் பயணம் பற்றி எழுப்பிய கேள்விக்கு பதில் தருவோம்.
இன்ஷா அல்லாஹ்...


போலி பகுத்தறிவுவாதிகளோடு விவாதிக்க உணர்வு இதழ் அறைகூவல். உண்மை ஏட்டுக்கு பதிலடி பாகம் - 3

நாயகம் (ஸல்) அவர்களின் மிஹ்ராஜ் எனும் விண்வெளிப் பயணம் குறித்து தேவையில்லாமல் விமர்சித்து திராவிட கழகத்தின் உண்மை ஏடு முஸ்லிம்களை வம்புக்கிழுத்தது.

எதற்கெடுத்தாலும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்க இயலுமா என்று கேட்டு தங்களை மேதாவிகள்போல் காட்டிக் கொள்ளும் போலி பகுத்தறிவுவாதிகளின் மடமைகளை வெளிச்சம் போட்டுக் காட்ட அவர்களே நமக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தந்து விட்டார்கள்.

எனவே மிஹ்ராஜ் பற்றி விளக்குவதற்கு முன்னால் பகுத்தறிவின் ஒட்டுமொத்த குத்தகைதாரர்களின் மடமைகளையும் மூடநம்பிக்கைகளையும் அம்பலப்படுத்தி வருகிறோம்.

நாம் எழுப்பும் கேள்விகள் குறித்து பகிரங்க விவாதத்திற்கு தயாரா? என்று வீரமணி வகையறாக்களைக் கேட்டு வருகிறோம். அதன் தொடர்ச்சியாக மேலும் சில கேள்விகளை முன்வைக்கிறோம்.

பெரியாருக்குச் சிலை

ஈ.வெ.ரா. பெரியார் அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னால் மரணித்து விட்டார். அவர் அடக்கம் செய்யப்பட்டு மண்ணோடு மண்ணாகி விட்டார் என்பது வரலாற்று உண்மை. அறிவியல்பூர்வமாக நிரூபிக்க அறைகூவல் விட்டால் அதை நிரூபிக்க முடியும்.

ஆனால் பகுத்தறிவின் மொத்த குத்தகைதாரர்கள் பெரியாருக்கு நாடெங்கும் சிலைகளை நிறுவியுள்ளனர். இரும்பு, செம்பு, பாறை போன்றவற்றை பெரியாரைப்போல் செதுக்கி வைத்துள்ளனர். அந்தச் சிலைகளின் பீடத்தில் பெரியார் என்று எழுதியும் வைத்துள்ளனர்.

எதற்கெடுத்தாலும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்க முடியுமா என்று கேள்வி எழுப்பிவரும் பகுத்தறிவு கொழுந்துகளிடம் இதை அறிவியல்பூர்வமாக நிரூபிக்குமாறு அறைகூவல் விடுக்கிறோம்.

பெரியாரின் வெண்கலச் சிலையையும், பெரியார் எதிர்த்த இந்துக் கடவுள்களின் வெண்கலச் சிலையையும் உலகில் உள்ள எந்தச் சோதனைக் கூடத்திலாவது சோதித்துப் பார்த்து இது பெரியார் வெண்கலம், இது சாமி சிலையின் வெண்கலம் என்று வீரமணி வகையறாக்கள் நிரூபித்துக் காட் டுவார்களா?

பெரியாரின் கற்சிலையையும், அதே கல்லால் ஆன அம்மிக் குழவியையும் அறிவியல்பூர்வமாக சோதித்தால் இரண்டும் ஒன்று என்ற முடிவுதான் கிடைக்கும்.

இது பெரியார் எனக் கூறுவதற்கு எந்த அறிவியல் நிரூபணமும் இல்லை என்று தெரிந்து கொண்டே பெரியார் சிலை நிறுவு வது எந்த வகையான பகுத்தறிவு?

பொது இடங்களில் இத்தகைய சிலைகளை நிறுவுவதால் மக்களுக்கு இடையூறு தவிர எந்தப் பயனும் இல்லை என்பதையும், பொருள் விரயம் என்பதையும் அறியாத இவர்கள் எப்படி தம்மை பகுத்தறிவுவாதிகள் எனக் கூறிக்கொள்கிறார்கள்?

சிலைக்கு மாலை அணிவித்தல்

சிலை வடிப்பது எந்த அளவுக்கு மடமையோ அது போன்ற, அதையும் மிஞ்சுகின்ற மடமைதான் சிலைகளுக்கு மாலை அணிவிப்பது.

பெரியாரின் பெயரால் மூடத்தனமாக நிறுவப்பட்ட ஒரு சிலைக்கு இவர்கள் மாலை அணிவிக்கிறார்களே இந்த மாலை அணிவிப்பதை அந்தச் சிலை உணருமா? அல்லது அந்தச் சிலையின் மூலம் யாரை நினைக்கிறார்களோ அந்தப் பெரியார்தான் இதை உணருவாரா?

இதில் அடங்கியுள்ள அறிவியல் தத்துவம் என்ன இதில் உள்ள பகுத்தறிவு என்ன என்பதை பகிரங்க மேடையில் பட்டியல் போட்டு எமது கேள்விகளை எதிர் கொள்ள போலி பகுத்தறிவுவாதிகள் தயாரா?

இதுபோன்ற சிலைகளை வடித்துக் கொண்டு, இந்து மத பக்தர்கள் பூவையும், தேங்காயையும், சூடத்தையும் காட்டுவது மட்டும் மூடநம்பிக்கை என்றால் பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பது மட்டும் பகுத்தறிவா?

குறிப்பிட்ட சிலைக்குள் அவர்கள் ஒருவரைப் பார்ப்பதற்கும் அதுபோன்ற சிலையில் பெரியாரைப் பார்ப்பதற்கும் உள்ள வேறுபாடு என்ன?

தெய்வங்களை நீங்கள் மாற்றிக் கொண்டீர்களே தவிர நம்பிக்கை ஒரே மாதிரியானதுதானே!

அவர்கள் படையல் செய்யும் பொருட்கள் வேறு! நீங்கள் படையல் செய்யும் பொருட்கள் வேறு என்ற வித்தியாசத்தைத் தவிர இரண்டு நம்பிக்கைக்கும் என்ன வித்தியாசம்?

கடவுள் சிலையைக் கடத்திச் சென்றால் அதிலிருந்து அந்தக் கடவுள் தன்னைத் தானே காத்துக் கொள்வாரா, பக்தர்கள் தானே காக்க வேண்டும், கடவுள் சிலை காணாமல் போய் விட்டால் அதைப் போலீஸ்தானே மீட்டுத் தரவேண்டும் என்றெல்லாம் பகுத்தறிவு வாதம் பேசினீர்களே! இதே கேள்வியை உங்களிடம் கேட்டால் அதற்கு அறிவியல்பூர்வமாக உங்களால் மறுமொழி கூற முடியுமா?

பெரியார் சிலையை யாரேனும் கடத்திச் சென்றாலும் அவரது பக்தர்கள்தானே அதைத் தடுக்க வேண்டும். பெரியாரின் சிலையே தன்னைத்தானே காத்துக் கொள்ளுமா? பெரியார் சிலை காணாமல் போனால் போலீஸ்தானே அதை மீட்க வேண்டும்?

காக்கைகள் எச்சம் போடுவதைக்கூட அந்தச் சிலையால் தடுக்க முடியாது எனும்போது அதை பெரியார் என்று உரு வகப்படுத்துவது எந்த வகையில் பகுத்தறிவு என்பதை வீரமணி வகையறாக்கள் விளக்க வேண்டும்.

இந்தக் கேள்வியை திராவிடக் கொழுந்து ஒருவரிடம் நாம் நேரில் கேட்டபோது, அவர் அளித்த பதிலைத்தான் இவர்களும் தர முடியும்.

கல்லைக் கடவுள் என்று எண்ணுவோர் அந்தக் கல்லிடம் வேண்டுதல் செய்கிறார்கள். பெரியாரின் சிலையிடம் நாங்கள் வேண்டுதல் எதுவும் செய்வதில்லையே என்பதுதான் அந்த திராவிடக் கொழுந்து அளித்த பதில். இதில் ஏதாவது பகுத்தறிவு இருக்கிறதா?

யானைக்கு சிலை வடிப்பவர்கள் அதில் யானையைக் காண்பார்கள்.
பூனைக்கு சிலை வடிப்பவர்கள் அதில் பூனையைக் காண்பார்கள்.
மனிதனின் சிலை வடிப்பவர்கள் அதில் மனிதனைக் காண்பார்கள்.
கடவுளின் சிலை வடிப்பவர்கள் அதில் கடவுளைக் காண்பார்கள்.

எல்லாமே இல்லாத ஒன்றை இருப்பதாகக் கற்பனை செய்வதன் வெளிப்பாடுதான். இந்த அடிப்படையை விளங்காமல் நாங்கள் பெரியாரிடம் வேண்டுதல் செய்தோமா என்று கேட்பது என்னே மதியீனம்!

யானை சிலையைக் காண்பவன் அதற்கு மாலை அணிவிக்க மாட்டான். ஆனால் பெரியார் சிலையைக் காண்பவன் அதற்கு மாலை அணிவிக்கிறான். இதனால் பெரியார் சிலை வடிப்பவர்களைவிட யானை சிலை வடிப்பவர்கள் அறிவில் குறைந்தவர்கள் என்று நாம் வாதம் செய்தால் அதை வீரமணி வகையறாக்கள் ஒப்புக் கொள்வார்களா?

நினைவிடமும் அஞ்சலியும் !

பெரியார் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவிடம் எழுப்புவதும், அதில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவதும் போலி பகுத்தறிவு வாதிகளின் வணக்க வழிபாடாக அமைந்துள்ளது.

ஒருவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் அவரது நினைவிடம் என்று முடிவு செய்வதில் உள்ள பகுத்தறிவு என்ன? எந்த இடமாக இருந்தாலும் அந்த இடத்தில் எத்தனையோ காரியங்கள் நிகழ்ந்திருக்கும். அந்த இடத்தில் நடந்த ஏராளமான காரியங்களில் இந்த மனிதர் அடக்கம் செய்யப்பட்டதும் ஒன்று.

அத்தனையையும் அலட்சியம் செய்துவிட்டு இன்னாரின் நினைவிடம் என்று அந்த இடத்தை முடிவு செய்வது எந்த வகையான பகுத்தறிவு?

அந்த மனிதர் அடக்கம் செய்யப்பட்டு ஆண்டுகள் பல கடந்துவிட்டால் அவர் மண்ணோடு மண்ணாக மக்கிப் போய் இருப்பார்.

காலாகாலத்துக்கும் அதை அவரது நினைவிடம் என்று கருதிக் கொண்டாடு வதற்கும், பகுத்தறிவுக்கும் என்ன சம்மந்தம்? அதையாவது மன்னித்து விடலாம். அந்த இடத்தில் இலட்சக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்து அழகு படுத்துவதுதான் பகுத்தறிவா?

இதையும்கூட மன்னித்து விடலாம். அந்த இடத்தில் மலர் வளையத்தை வைத்து அஞ்சலி செலுத்துகிறீர்களே! நீங்கள் மலர் வளையம் வைப்பதை பெரியார் அறிவாரா? உணர்வாரா? உணர மாட்டார் என்றால் அங்கே மலர் வளையம் வைப்பதில் உள்ள அறிவியல் தத்துவம் என்ன என்பதை முஸ்லிம்களை வம்புக் கிழுக்கும் வீரமணிகள் விளக்குவார்களா? இவர்களின் பகுத்தறிவும் சுயமரியாதையும் இன்னும் அம்பலமாகும்.
இன்ஷா அல்லாஹ்...


போலி பகுத்தறிவுவாதிகளோடு விவாதிக்க உணர்வு இதழ் அறைகூவல். உண்மை ஏட்டுக்கு பதிலடி பாகம் - 2

முஸ்லிம்களை வம்புக்கு இழுக்கும் வகையில் திராவிடர் கழகத்தின் உண்மை எனும் ஏடு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மிஹ்ராஜ் எனும் விண்வெளிப் பயணம் பற்றி கிண்டலடித்து கட்டுரை எழுதியதையும், 'உண்மை' ஏட்டின் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு முன்னால் புரிந்து கொள்ள சில விஷயங்களையும் நாம் சுட்டிக் காட்டியிருந்தோம்.

மிஹ்ராஜ் பற்றிய உண்மை ஏட்டின் விமர்சனத்துக்குள் நுழைவதற்கு முன்னால் போலி பகுத்தறிவுவாதிகளுக்குச் சொல்ல வேண்டிய சில செய்திகளையும் நாம் சுட்டிக் காட்டக் கடமைப்பட்டுள்ளோம்.

மதவாதிகள் மூடநம்பிக்கை மிக்கவர்கள், சுயமரியாதை அற்றவர்கள் என்றெல்லாம் தொடர்ந்து விமர்சனம் செய்துவரும் போலி பகுத்தறிவுவாதிகள் முதலில் தங்களின் நடவடிக்கைகளை பகுத்தறிவுப்பூர்வமாகவும் அறிவியலுக்கு ஏற்றவாறும் அமைத்துக் கொள்ள வேண்டும்.

மதவாதிகள் தங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் அறிவியல்பூர்வமாக அமைத்துக் கொண்டதாக உரிமை கொண்டாடுவதில்லை. அவர்களிடம் சில மூடநம்பிக்கைகள் இருப்பதை மன்னித்துவிடலாம். ஆனால் பகுத்தறிவையும், சுயமரியாதையையும், ஒட்டு மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்துள்ள வீரமணி வகையறாக்களிடம் மூட நம்பிக்கை இருந்தால் அது மன்னிக்க முடியாததாகும்.

திராவிட இனம்

போலி பகுத்தறிவுவாதிகள் தம்மை திராவிடர் கழகம் என்ற பெயரில் அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். மனித குலத்தை ஆண்கள், பெண்கள் என்று வகைப்படுத்துவதில் அறிவியல் பூர்வமான நிரூபணம் இருக்கிறது. மனித குலத்தை இரத்த வகைகளின் அடிப்படையில் குரூப்களாக வகைப்படுத்துவதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியும்.

மனித குலத்தை அவர்களின் நடத்தை அடிப்படையில் நல்லவன், கெட்டவன் என்று வகைப்படுத்துவது அறிவுப்பூர்வமானது என்பதை ஒப்புக் கொள்ளலாம்.

மனிதர்களை திராவிடர் எனவும், ஆரியன் எனவும் இவ்விரண்டிலும் சேராதவர்கள் எனவும் வகைப்படுத்துவதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியுமா?

ஒரு ஆரியனின் உடலையும், திராவிடனின் உடலையும், இரண்டிலும் சேராதவரின் உடலையும் அறியலின் அனைத்து வகையில் சோதித்துப் பார்த்தாலும் அந்த அறிவியல் காரணமாக இவர் திராவிடர், இவர் ஆரியர் என்று நிரூபித்துக் காட்ட வீரமணி வகையறாக்கள் முன் வருவார்களா?

சிந்திக்கும் திறன் குறைந்த காலத்தில் சிலர் தம்மை ஆரியர் என்று வகைப்படுத்திக் கொண்டனர். மற்றும் சிலர் தம்மை திராவிடர் என்றும் வகைப்படுத்திக் கொண்டனர். இந்த மூடத்தனத்தை சிந்திக்காமல் அங்கீகரித்து ஏற்றுக் கொண்டது எந்தவகையான பகுத்தறிவு என்பதை போலி பகுத்தறிவுவாதிகள் பொதுமேடையில் விவாதிக்கத் தயாரா?

திராவிடன் எல்லாம் நல்லவன் என்றும், ஆரியன் எல்லாம் கெட்டவன் என்றும் கூறுவதில் ஏதாவது பகுத்தறிவு இருக்கிறதா?

திராவிடனான மலையாளியும், திராவிடனான கன்னடனும், திராவிடனான தெலுங்கனும், திராவிடனான தமிழனுக்கு தண்ணீர் தர மறுக்கிறார்களே! திராவிடன் தண்ணீர் தர மறுப்பதால் நாம் அதைத் தட்டிக் கேட்கக் கூடாது என்று போலி பகுத்தறிவுவாதிகள் கூறுவார்களா?

ஆரியன் எல்லாம் கெட்டவன் என்று ஒரு பக்கம் மூட நம்பிக்கையை விதைத்துக் கொண்டு இன்னொரு பக்கம் ஆரியரான ஜெயலலிதாவுக்கு சமூக நீதி காத்த வீராங்கனை பட்டம் கொடுத்தீர்களே! இந்த இரண்டில் எது பகுத்தறிவுப்பூர்வமானது? எது அறிவுப்பூர்வமானது? போலி பகுத்தறிவுவாதிகளால் விளக்க முடியுமா?

குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்ற மூடநம்பிக்கைக்கு பகுத்தறிவு சாயம் பூசும் போலி பகுத்தறிவுவாதிகளே! உங்கள் நம்பிக்கைப்படியே திராவிடக் குரங்கிலிருந்து திராவிடனும், ஆரிய குரங்கிலிருந்து ஆரியனும் தோன்றினான் என்றால் அதை நிரூபிக்க முடியுமா? டார்வின் தத்துவத்தின்படி கூட உங்களால் இதை நிரூபிக்க முடியாது.

உங்கள் பகுத்தறிவே பல்லிளிக்கும்போது மற்றவர்களிடம் பகுத்தறிவு வாதம் பேச கொஞ்சமாவது வெட் கப்பட வேண்டாமா?

ஜீனோம் இரகசியம்

மனிதனின் ஜீன்களைப் பற்றியும் இரத்த வகைகளைப் பற்றியும், உடலின் உட்கூறு பற்றியும், முழு அறிவு இல்லாத காலத்தில் டார்வின் என்பவன் வெளித் தோற்றத்தின் அடிப்படையில் ஊகமாக (அறிவியல் பூர்வமாக அல்ல) குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்று கூறினான். அவன் காலத்து அறிவு அவ்வளவுதான் என்பதால் டார்வினை மன்னித்து விடலாம்.

ஆனல் அறிவியல் பூர்வமாக இது பொய் என்று நிரூபிக்கப்பட்ட பிறகும் அதே மூட நம்பிக்கையைப் பிரச்சாரம் செய்வது எந்த வகை பகுத்தறிவு?

போலி பகுத்தறிவுவாதிகளுக்கு நாம் அறைகூவல் விடுக்கிறோம். குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்பதை அறிவியல் நிரூபணத்துடன் நிரூபித்துக் காட்ட நீங்கள் தயாரா?

மனிதன் எந்த இனத்திலிருந்து வந்தவனோ அந்த இனமும் மனித இனமும் உடலின் உட்கூறு விஷயத்தில் நெருக்கமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அதிலிருந்து இது வந்தது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபணமாகும்.

மனிதனின் இரத்தம், குரங்கின் இரத்தம் இரண்டையும் சோதித்துப் பார்த்து குரங்கின் இரத்தம் மனிதனின் இரத்தத்திற்கு 90 சதவீதம் நெருக்கமாக உள்ளது என்று நிரூபித்தால் இதில் ஏதோ அறிவியல் இருக்கிறது என்று முடிவு செய்ய இயலும்.

மிருகங்களின் இரத்தத்தை மனிதனுக்குச் செலுத்த ஏதாவது வழி இருக்கிறதா என்று ஆய்வு செய்தபோது குரங்கின் இரத்தம் மனித இரத்தத்துடன் எந்த வகையிலும் ஒத்துப்போகவில்லை. அடர்த்தி, வெள்ளை, சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை உள்ளிட்ட எதுவுமே மனித இரத்தத்திற்கு நெருக்கமாக இல்லை என்று கண்டறிந்து விட்டனர்.

மிருகங்களில் பன்றியின் இரத்தம் மட்டுமே மனிதனின் இரத்தத்திற்கு மிகவும் நெருக்கமாக உள்ளது என்பதுதான் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஓரளவாவது அறிவியல் பூர்வமாக நடக்க போலி பகுத்தறிவுவாதிகள் விரும்பினால் பன்றியிலிருந்து மனிதன் தோன்றியிருக்கலாம் என்று கூறினால் அது டார்வின் ஊகத்தை விடச் சிறந்ததாக இருக்கும்.

அதுபோல் மனிதனின் இதயம் செயல் இழந்து போவதால் பலரும் மரணிக்கிறார்கள். எனவே மிருகங்களின் இதயத்தை மனிதனுக்குப் பொருத்த முடியும் என்றால் பலரது உயிரைக் காப்பாற்றலாமே என்று விஞ்ஞானிகள் முயன்றனர்.

குரங்கின் அடுத்த மேல்நிலைதான் மனிதன் என்பது உண்மையாக இருந்தால் குரங்கின் இதயம் மனிதனின் இதயத்துக்குச் சமமானதாக அல்லது அதிக நெருக்கமானதாக இருக்க வேண்டுமல் லவா?

விஞ்ஞானிகளின் முடிவு டார்வினைப் பொய்ப்பிக்கும் வகையில்தான் அமைந்தது. இதயத்தின் அளவு, அதன் துடிப்பு, அது 'பம்ப்' பண்ணும் வேகம் உள்ளிட்ட எதிலுமே மனிதன் இதயத்துடன் குரங்கின் இதயம் கொஞ்சமும் ஒத்துப் போகவில்லை என்று கண்டறிந்தனர்.

எந்த மிருகத்தின் இதயத்தை விடவும் பன்றியின் இதயமே மனிதனின் இதயத்துக்கு நெருக்கமானது என்று கண்டறிந்து விட்டனர்.

அறிவியல் பூர்வமாக மனிதனுக்கும், குரங்குக்கும் எந்த நெருக்கமும் இல்லை என்பது இதன் மூலம் நிரூபணமான பின்பும் குரங்கின் புதல்வர்கள் இனிமேல் தம்மை பன்றியின் புதல்வர்கள் என்று அறிவிக்கத் தயாரா?

இதைவிட முக்கியமானது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஜீனோம் இரகசியம் துரையைச் சேர்ந்த பிறமலை கள்ளர் சமுதாயம் உள்ளிட்ட உலகின் பல மக்களின் ஜீன்களை சோதித்து விஞ்ஞானிகள் எடுத்த முடிவு என்ன?

மனித குலம் முழுவதும் ஒரே ஒரு ஆப்பிரிக்கத் தாயிலிருந்து தோன்றியவர்கள் என்பதுதான் அந்த முடிவு.

(இதுபோன்ற அறிவியல் கண்டுபிடிப் புகள் போலிப் பகுத்தறிவுவாதிகளுக்கு தெரியாவிட்டால் இந்தியா டுடேயில் மிகவும் தெளிவாக, ஆதாரப்பூர்வமாக இது பற்றி சிறப்பிதழ் போட்டார்கள். அதையாவது வாசிக்கட்டும்).

மனிதர்களில் திராவிடர், ஆரியர் என்பதெல்லாம் கிடையாது. அனைவருமே ஒரே தாய், தந்தையிலிருந்து பிறந்தவர்கள் என்று இஸ்லாம் கூறுவதுபோலவே அறிவியலும் கூறுகிறது என்பதை போலிப் பகுத்தறிவுவாதிகள் கவனிக்கட்டும்.

பிறந்த நாளும், நினைவு நாளும்

போலிப் பகுத்தறிவுவாதிகள் பெரியாரின் பிறந்த நாள், இறந்த நாள் என்று குறிப்பிட்ட நாளில் கொண்டாடுகின்றனர்.

பிறந்தநாளின்போது இவர்கள் செய்யும் மூடநம்பிக்கைகளைத் தனியாகப் பார்ப்போம். பிறந்த நாள், இறந்த நாள் என்று ஆண்டுதோறும் கொண்டாடுவது எந்த வகையில் அறிவியல் பூர்வமானது என்பதை போலி பகுத்தறிவுவாதிகள் நிரூபிக்கத் தயாரா?

01.01.1900 த்தில் ஒருவர் பிறந்ததாக வைத்துக் கொள்வோம். அந்த நாள்தான் அவரது பிறந்த நாள் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. 01.01.1901, 01.01.1902 என்று அடுத்தடுத்த வருடங்களில் வரும் நாளை பிறந்த நாள் என்று கூறுவது அறிவியலுக்கு எதிரானது இல்லையா?

01.01.1900 என்பது போய்விட்டது. அறிவியல் பூர்வமாக அந்த நாள் திரும்பி வரப்போவது இல்லை. 01.01.1901 என்பது 01.01.1900த்தில் பிறந்தவரின் பிறந்த நாளாக எப்படி ஆகும்? 01.01.1901ல் பூமி ரிவர்சில் சுற்றி 01.01.1900த்தை அடைகிறதா?

பகுத்தறிவு இல்லாதவர்கள் என்று போலி பகுத்தறிவுவாதிகளால் எள்ளி நகையாடப்படுவோர் பிறந்த நாள், நினைவு நாள் என்று மூடத்தனமாக அறிவியலுக்கு எதிராக முடிவு செய்ததை கண் மூடி நம்பிக் கொண்டு இவர்களும் பின்பற்றுகின்றனர் என்பதைத் தவிர, இதில் எள்ளின் முனையளவும் அறிவியல் கிடையாது.

பூமியின் சுழற்சி, சூரியனின் ஓட்டம் மற்றும் சுழற்சியின் அடிப்படையில் 01.01.1900தான் 01.01.1901 என்று ஆதாரத்துடன் நிரூபித்துக் காட்ட போலி பகுத்தறிவுவாதிகள் முன் வரவேண்டும்.

மற்றவர்கள் எப்படி உணர்வுப்பூர்வமாக அந்தக் காரியத்தையும் செய்து வருகிறார்களோ அதுபோலதான் பகுத்த றிவின் மொத்த குத்தகைதாரர்களும் நடக்கின்றனர். மற்றவர்களின் நம்பிக்கைக்கு அறிவியல் விளக்கம் கேட்பதற்கு முன்னால் தங்களின் இந்த நம்பிக்கையையும் அறிவியல் ஆதாரத்துடன் வீரமணி வகையறாக்கள் நிரூபிக்க தயாரா என்பதை அறைகூவலாக முன் வைக்கிறோம்.

சந்தி சிரிக்கும் உங்கள் சுயமரியாதை யையும், போலி பகுத்தறிவையும் இன்னும் கிழித்து எறிய வேண்டியுள்ளது. அதை முடித்துவிட்டு மிஹ்ராஜ் பற்றி பதில் தருவோம்.

Blog Archive